அறந்தாங்கி, ஜூலை 27-
அறந்தாங்கியில் வீர மாகாளி அம்மன் கோவில் தேரோட்டம் புதன், வியா ழக்கிழமைகளில் நடை பெற்றது. புதன்கிழமை கொட்டும் மழையிலும் திர ளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை வீர மாகாளி அம்மன் புதுக் கோட்டை மாவட்டம், அறந் தாங்கியில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 14- ஆம் தேதி பூச்சொரிதல் விழா வுடன் திருவிழா தொடங்கி யது. இதைத்தொடர்ந்து தின மும் மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது.
மேலும் அம்மன் பல் வேறு வாகனங்களில் எழுந்த ருளி வீதி உலா வந்தார். தமி ழகத்தில் எங்கும் இல்லாத வகையில் அறந்தாங்கி வீர மாகாளி அம்மன் கோவில் தேரோட்டம் இரண்டு நாட் கள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதை யடுத்துச் சிறப்பு அலங்கா ரத்தில் வீரமாகாளி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி னார். மாலையில் 4.30 மணிக் குப் பாலைவனம் ஜமீன் தாம ரைச்செல்வம் தேரை வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின் னர்த் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த னர். தேர் பக்தர்கள் வெள் ளத்தில் ஆடி அசைந்து வந் தது.
பெரிய கடை வீதியில் தேர் வந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தேரை பக்தர்கள் பெரிய கடை வீதி, எம்.ஜி.ஆர். சிலை வழியாக இழுத்து வந்த ராஜேந்திர சோழீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் கோவில் எதிரே நிறுத்தினர்.
புதனன்று அருகன்குளம் சாலை டூரிஸ்ட் வேன் உரி மையாளர்கள், ஒட்டு நர்கள் சங்கம் சார்பில் அன்ன தாணம் வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) மாலை அங்கிருந்து தேர் இழுக் கப்பட்டுப் பழைய மருத்துவ மனை சாலை வழியாக, பெரிய பள்ளிவாசல், ஆவு டையார்கோவில் சாலை வழி யாக வந்த தேர் வ.உ.சி திடல் அருகே நிலை நிறுத்தப்பட் டது. பொதுவாகத் தேரோட் டத்தின் போது தேர் கோவி லைச் சுற்றி வரும். ஆனால் இங்குக் கோவிலைத் தேர் சுற்றி வருவது இல்லை. வீர மாகாளி அம்மன் கோவில் தேர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகப் பெரிய பள்ளிவாசலைச் சுற்றி வருகிறது. முன்னதாகக் கிரா மங்களில் உள்ள கோவில் களிலிருந்து கிராம மக்கள் தட்டுகளில் தேங்காய், பட்டு, பூ மாலை மற்றும் பொருட்கள் வைத்து ஊர் வலமாகக் கோவிலுக்குச் சீர் கொண்டு வந்தனர். இதேபோல மண்டகபடி தாரர்களும் ஒன்றிணைந்து வானவேடிக்கையுடன் சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாகக் கோவி லுக்குக் கொண்டு வந்தனர்.