districts

img

சேங்காலிபுரம் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா: மாணவர்களுக்கு பரிசு

திருவாரூர், மார்ச் 17 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா வரவேற்றார். குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலெட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவாச்சாரியார், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அம்பிகாபதி, கவுன்சிலர் சந்திரபோஸ், எஸ்எம்எஸ் தலைவர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.