districts

img

அசோகா சிசு விகார் பள்ளியில் ஆண்டு விழா

மன்னார்குடி, மார்ச் 4- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசோகா சிசு விகார் பள்ளியில் 39  ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எம்.ஜி. வெங்கடராஜன் தலைமை வகித்தார். மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மனோகரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சுந்தரி வர வேற்றார். திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரியின் துணை முதல்வர் முனை வர் ஜி.இளங்கோ சிறப்புரையாற்றினார்.  பள்ளிக் குழந்தைகளின் யோகாசன நிகழ்ச்சிகள், இசை நாடகங்கள்,  குழு நடனங்கள் ஆகிய கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோர்கள்,  கல்வியாளர்கள் கலந்து கொண்ட இவ்விழாவின் நிகழ்ச்சிகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் முனைவர் அசோக் தொகுத்து வழங்கினார்.