தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி ஜீயபுரம் கடைவீதியில் நடந்த கூட்டத்தில், பி.சீனிவாசராவ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் தலைவர் தங்கதுரை, ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.