districts

பத்திரிகையாளர் குடும்பத்திற்கு உதவி

புதுக்கோட்டை, ஆக.10-

     மறைந்த பத்திரிக்கையாளர் லெனின் குடும்பத்தினரை டியுஜே மாநிலத் தலைவர் புருஷோத்தமன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலா ளர் சங்கர் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி அருகில் உள்ள ஆவணம் பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இ.லெனின்.

    இவர் ஈ-நாடு இணைய இதழில் முதுநிலை செய்தியா ளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் லெனின் திங்கள்கிழமை செய்தி சேகரிக்கச் சென்ற போது மார டைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்

    லெனின் குடும்பத்தினரை டியுஜே பத்திரிக்கையாளர் சங்க மாநிலத் தலைவர் புருஷோத்தமன், அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவரது குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கினர்.