கும்பகோணம், ஆக.22-
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் திருலோகி கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு குடியிருப்பு மனைப் பட்டா இல்லாத ஏழைகளுக்கு பட்டா வழங் கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கி, 8 வருடங்கள் ஆன பின்பும் மனைக்கான இடத்தை வருவாய்த் துறை யினர் அளந்து கொடுக்க வில்லை.
இதேபோல் திருலோகி கிராமத்தில் வீட்டுமனை இல்லாதவர்கள் 40 பேர் உள்ளனர். இதனால், அனை வருக்கும் வீட்டுமனை வழங் கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விவசாயத் தொழிலாளர் சங்கம், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயத் தொழிலாளர் விடு தலை முன்னணி சார்பில் சாலையோரம் சோறாக்கும் போராட்டம் அறிவிக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் சரகம், திரு லோகி வருவாய் கிராமத்தில் குடியிருப்பு மனைப் பட்டா இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்க கோரி, திரு லோகி கடைவீதியில் சாலை யோரம் சோறாக்கும் போராட் டம் நடத்த இருப்பதாக விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வட்டாட்சி யர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதில் திருலோகி கிராமத்தில் பருத்திமேடு என்னும் இடத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விலையில்லா வீட்டுமனை பட்டா நிலத்தில் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனை ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலையில், சுத்தம் செய்த பின்பு நில அளவை செய்வதற்கு ஆவன செய்து, 10 தினங்க ளுக்குள் நில அளவை செய்து தரப்படும்.
திருலோகி கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த புல எண்.260/1, 260/ 02-ல் உள்ள அரசு புறம் போக்கு நிலத்தை கைய கப்படுத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்து இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர்.
இதனால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, பக்கிரிசாமி மற்றும் விசிக சார்பில் பால குரு, அமுதம் துரையரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.