districts

img

தஞ்சாவூர் அருகே ரூ.1.70 கோடி மதிப்பில் 14 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

தஞ்சாவூர், டிச.28 –  தஞ்சாவூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, கோவி லுக்குச் சொந்தமான, 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 ஏக்கர் இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழஉளூரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில், நல்லமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 14.17 ஏக்கர் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. அந்த நிலங்களில் அவர்கள் சாகுபடி யும் செய்து வந்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பரிதியப்பர் கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் பேச்சுவார்ததை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதையடுத்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில், அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் பார்த்தசாரதி உள் ளிட்ட கோவில் பணியாளர்கள், சம் பந்தப்பட்ட இடத்தை மீட்டு, அறிவிப்பு பலகையும் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 70 லட்சம் ஆகும்.