districts

img

நீச்சல் போட்டி: ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை, செப்.5 - மாநில அளவிலான நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அக்வா சேலஞ்ச்-2023 என்ற மாநில அளவிலான நீச்சல் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாணவர் தனுஷ் கிருஷ்ணன் பிஆர் 100மீ பிரிவில் இரண்டாம் பரிசும், சந்தோஷிகா பிஆர் 250 மீ பிரிவில் மூன்றாம் பரிசும், பிளை 50 மீ பிரிவில் இரண்டாம் பரிசும், தேவிகா கிரேடு 4-ல் இரண்டாம் பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளனர். நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார். துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.