திருச்சிராப்பள்ளி, நவ.24 - தமிழக அரசு நவ.7 அன்று வெளி யிட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடி யாக வகுக்க வேண்டும். ஆர்டிஓ, காவல்துறை மாமுலை கட்டுப் படுத்த வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண் டும். இணையவழி சேவையை உட னடியாக துவங்க வேண்டும். மேக்சி கேப் மற்றும் எஸ்யூவி வாகனங்களுக்கு பழைய காலா ண்டு வரி விதிப்பு முறையை கடை பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், மாவட்டத் தலை வர் சீனிவாசன், மாவட்டச் செயலா ளர்கள் தரைக்கடை சங்க செல்வி, ஆட்டோ சங்க மணிகண்டன், சுமைப்பணி சங்க சிவக்குமார் ஆகி யோர் பேசினர். இதில் நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் சுரேஷ் நன்றி கூறினார்.
கும்பகோணம்
தஞ்சை மாவட்ட சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கும்பகோணம் வட்டார போக்குவரத்து தென்னூர் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பார்த்தசாரதி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார், சாலை போக்கு வரத்து மாநிலக் குழு உறுப்பினர் பரத் ராஜன், கௌரவத் தலைவர் ஆர்.செல்வம், ஆட்டோ சங்க கவுரவத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். ஏராளமான ஆட்டோ தொழிலா ளர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
புதுக்கோட்டை
அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜகுபரலி, ஏ.முகமதுகனி, கே.சாந்தார் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலச் செயலா ளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், அனைத்துப் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், ஆட்டோ சங்கப் பொதுச் செயலா ளர் ஆர்.மணிமாறன் உள்ளிட்டோர் பேசினர்.கும்பகோணம்