districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஆற்றில் குளித்த இளைஞர்  நீரில் மூழ்கி பலி

அரியலூர், ஏப்.20- அரியலூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கோகுல்(22). இவர், அரியலூர் தேரடி பகுதி யில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை மக்க ளவைத் தேர்தலையொட்டி வாக்கு செலுத்தி விட்டு நண்பர்களுடன் திருமானூர் கொள்ளி டம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் தண்ணீர் செல்லாத நிலையில், அரியலூர் - தஞ்சாவூர் பாலம் அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளித் துள்ளனர். அப்போது, கோகுல் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனே நண்பர்கள் கூச்சலிட்டதை யடுத்து, அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த வர்கள், தங்களிடமிருந்த வலைகளை வீசி  தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை  மணி நேரத்துக்கு பிறகு கோகுல் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் தீய ணைப்புத் துறையினர் மற்றும் திருமானூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

குமரியில் கோடை மழை: சுருளகோட்டில் 19.4 மி.மீ.மழை பதிவு

நாகர்கோவில், ஏப்.20- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு  வார காலமாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. ஏப்ரல் 19 வெள்ளியன்றும் மலை யோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சனிக்கிழமையன்று காலை 8 மணி வரையி லான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சுருள கோட்டில் 19.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது சிற்றார்  I அணைப் பகுதியில்– 6 மி.மீட்டர் மழை பெய்துள் ளது. சிவலோகம் (சிற்றார் II) 5.4 மி.மீட்டர் மழை பதி வாகி உள்ளது. புத்தன் அணை 1.6 மி.மீ, பெருஞ் சாணி 1 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் சிற்றார் I அணையின் மொத்த உயரமான 18  அடியில் 9.28 அடி தண்ணீர் உள்ளது. சிற்றார் II அணையின் 18 அடியி்ல் 9.38 அடி தண்ணீர்  உள்ளது, பேச்சிப்பாறை அணையின் 48 அடியில்  42.53 அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்  வரத்து விநாடிக்கு 90 கன அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையின் 77 அடியில் 47.7 அடி  தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 21 கன அடியாக வும் உள்ளது.  42.62 அடி உயர பொய்கை அணை யில் 16.20 அடி தண்ணீர் உள்ளது. 54.12 அடி உய ரம் உள்ள மாம்பழத்துறையாறு அணையில் 19.36  அடி தண்ணீர் உள்ளது. 25 அடி உயரம் உள்ள முக் கடல் அணையில் 7.1 அடி தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக  முக்கடல் அணையில் இருந்து விநாடிக்கு 8.6 கன  அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கள்ள ஓட்டு போட்டதாகக்கூறி வாலிபர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில், ஏப்.20- குமரி மாவட்டம், இரணியல் அருகே கட்டிமாங்கோடு  என்ற இடத்தைச் சேர்ந்தவர் இளையராஜா என்ற கணேஷ்  ராஜா. இவர் ஏப்ரல் 19 வெள்ளியன்று மதியம் கட்டி மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் அவருக்கு பின்னால்  அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நின்றார். வாக்குச்சாவடிக்குள் சென்றதும் கணேஷ் ராஜா வாக்கு  சீட்டை சரிபார்த்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனு மதித்தனர். மின்னணு எந்திரத்தில் அவர் வாக்களித்து திரும்பும் போது, அரவிந்தும் அங்கு வந்தார். அரவிந்த் மின்னணு  வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கினை செலுத்துவதற்குள்  அங்கு நின்றிருந்த கணேஷ் ராஜா மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் மீண்டும் பட்டனை அழுத்தி விட்டாராம். இது குறித்து அரவிந்த் வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதற்குள் கணேஷ் ராஜா அங்கிருந்து  நைசாக வெளியேறி விட்டார். இது குறித்த தகவல் அறிந்த தும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு  குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசா ரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதி காரி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் ராஜா மீது இரணி யல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

பாட்டியைக் கொன்று  பேரன் தற்கொலை

திருவட்டார். ஏப்.20- குமரி மாவட்டம், திருவட்டார் அருகே பாரதப்பள்ளி சாரூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள் (80). கணவனும்  மகனும் இறந்துவிட்டனர். பேரன் அஜித் (23) உடன் வசித்து  வந்தார்.  அஜித் போதைக்கு அடிமையாகி தனது பாட்டியை  மிரட்டி பணம் பறித்து வந்ததாக தெரிகிறது.    பாட்டி தாசம்மாள் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதுமாறு அஜித் அடிக்கடி கேட்டுள்ளார்.  இந்நிலையில் ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை தனது பாட்டியு டன் தகராறு செய்து மிரட்டி உள்ளார். இதை பார்த்த அக்கம்  பக்கத்தினர் அஜித்தை துரத்தியுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை தாசம்மாள் கீழே இறந்து கிடப்பதும் அஜித்  வீட்டில் பிணமாக தொங்கு வதையும் பார்த்த நபர் அக்கம் பக்கத்தினரை அழைத்து  திருவட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவல் அடிப்படையில் திருவட்டார் போலீசார் விரைந்து  சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு கூராய்வுக் காக அனுப்பி வைத்தனர்.

சேதமடைந்த மின்கம்பத்தை  மாற்றக் கோரிக்கை

தூத்துக்குடி,ஏப்.20- தூத்துக்குடியில் சேத மடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்  கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி 15 ஆவது வார்டு கோரம் பள்ளம், சோரீஸ்புரம், இபி காலனி பகுதியில் மிகவும் சிதில மடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்பழுது எது வும் ஏற்பட்டால் மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி பழுது  பார்க்க முடியாத நிலையில் அந்த மின்கம்பம் உள்ளது.  எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன்பாக சேத மடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம்  அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

தென்காசி. ஏப்.20 -  தென்காசி மாவட்டம்  செங்கோட்டை பார்டர் பகுதியில்  குடிதண்ணீர்  விநியோகம் செய்யக்கோரி  சனிக்கிழமை யன்று பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.  வல்லம் ஊராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பார்டர் பகுதியில் இருந்து போர்வெல் போட்டு வல்லம் கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது ஆனால் நிர்வாகம் பார்டர் பகுதிக்கு குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது  என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பே பார்டர்  பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் அலுவலர் மற்றும் காவல் துறையி னர் தலையிட்டு, தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியதால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  தேர்தல் முடிந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாதால் மீண்டும் மக்கள் இப்போது சாலை மறியலில் ஈடுபட்ட னர். தென்காசி காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக அதிகாரி யிடம் பேசி குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக கூறிய தால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

தகவல் தர மறுத்த சார் பதிவாளருக்கு  ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு

தூத்துக்குடி,ஏப்.20- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  தகவல் தர மறுத்த சார்பதிவாளருக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி கிரா மத்தைச் சேர்ந்தவர் குருசாமி. ஓய்வு பெற்ற அரசு சர்வேயர். இவரது தந்தை சுப்பையா பெயரில் அய்யநேரி ஊராட்சிக்குட்பட்ட சுபா  நகரில் உள்ள நிலம் தொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற  வழக்கிற்கு சில ஆவணங்கள் தேவைப் பட்டதால். தனது தந்தை நிலம் தொடர்பாக கடந்த 7.12.2020 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 6 (1) கீழ் சில தகவல்களை  குருசாமி மாவட்ட பதிவாளரிடம் கேட்டார்.  குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பிரிவு 6(3)கீழ் பதில் அளிக்குமாறு கோவில்பட்டி சார் பதிவாளருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அப்போது கோவில்பட்டி சார்பதிவா ளராக இருந்த பாஸ்கரன், குருசாமி கேட்ட  கேள்விகளுக்கு பதிலாக மாறுபட்ட பதிலை  தந்த காரணத்தினால் குருசாமி மாவட்ட பதிவா ளருக்கு பிரிவு 19(1)கீழ் மேல் முறையீடு செய் தார். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை என்பதால் கடந்த 12.04.2021 அன்று தமிழ்நாடு  தகவல் ஆணையத்தில் பிரிவு 18(1)கீழ் புகார்  அளித்தார். இந்த புகார் தொடர்பாக கடந்த 03.04. 2024 சென்னையில் விசாரணை நடத்திய ஆணையம், குருசாமிக்கு சரியான தகவல் தர மறுத்த அப்போதைய கோவில்பட்டி சார்பதி வாளரும், பொது தகவல் அலுவலருமான பாஸ்கரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது மட்டுமின்றி, அந்த தொகையை பாஸ்கரனிடம் வசூலித்து குருசாமியிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டது.  இதையடுத்து தற்பொழுதைய கோவில் பட்டி சார் பதிவாளர் சூசை ஜேசுதாஸ், பாஸ்கர னிடம் வசூலித்த ரூ.25 ஆயிரத்திற்கான வரைவோலையை (டி,டி) குருசாமியிடம் வழங்கினார். தான் கேட்ட தகவலை தனக்கு சரியான நேரத்தில் வழங்கி இருந்தால் நீதி மன்றத்தில் இருக்கும் வழக்கு முடிந்து தனது இடப்பிரச்சனை முடிவடைந்து இருக்கும் , இத னால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு,  உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இனியாவது  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கும்  கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குருசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி தொகுதியில் 64.10 சதவீதம் வாக்குப்பதிவு

       திருநெல்வேலி ஏப் 20- நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஒரேகட்டமாக நடைபெற்றது.  திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இறுதியாக 64.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.      ஆலங்குளம் தொகுதியில் 73 சதவீதமும் திருநெல்வேலி தொகுதியில் 62.27 சதவீதமும் அம்பாசமுத்திரம் தொகுதியில் 65.80 சதவீதமும் பாளையங்கோட்டை தொகுதியில் மிகக்குறைந்த அளவாக 56.62 சதவீதமும் நாங்குநேரி தொகுதியில் 62.36 சதவீதமும் ராதாபுரம் தொகுதியில் 65.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில்  ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

இலவச - கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில், ஏப்.20-  இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையல்லாத தனியார் சுய நிதிப் பள்ளிகளில் நலிவடைந்த பிரி வினரின் குழந்தைகளுக்கான சேர்கைக்கு ஏப்ரல் 22 திங்கள்  முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: குழந்தைகளுக்கான இல வச மற்றும் கட்டாயக்கல்வி  உரி மைச்சட்டம்  2024-2025 ஆம் கல்வி யாண்டில் அனைத்துச் சிறு பான்மையற்ற தனியார் சுயநிதிப்  பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி மற்றும்  முதல் வகுப்பு) குறைந்தபட்சம் 25  சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.   அதனடிப்படையில் கன்னியா குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி தொடக்கநிலை வகுப்பிற்கு (எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பிற்கு) ஒரு கி.மீ. அருகாமையில் பள்ளி அமைந்திருக்க வேண்டும். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் 22. 04.2024 முதல் 20.05.2024 வரை எங்கி ருந்தும் சேர்க்கைக்கு விண்ணப்பிக் கலாம். மேலும் கன்னியாகுமரி மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலகம்/ கன்னியாகுமரி மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளி கள்)/ நாகர்கோவில், மார்த்தாண் டம் மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை) / மாவட்டக்கல்வி நாகர்கோவில், அலுவலகம் (தொ டக்கக்கல்வி) வட்டாரக்கல்வி அலு வலகம்/ ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையம் ஆகிய  அலுவலகங்களில் சேர்க்கைக் கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  மேலும் குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் மூலமாகவும் இணைய வழிமூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;