மயிலாடுதுறை, ஜூன் 15 - மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் மாணவர்களை கவரும் வகையில் வகுப்பறைகளுக்கு ரயில் போன்று ஓவியம் தீட்டப் பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோயில் அருகேயுள்ள மாத்தூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 190-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகை, கீழத்தெரு, மாரி யம்மன்கோயில் தெரு, புத்திரன் திடல், சித்தாவூர் காலனி, மாத்தூர் ஆகிய பகுதி களிலிருந்து வந்து கல்வி பயில்கின்ற னர். சிறப்பான கல்வி சேவையை தொடர்ந்து அளித்து வரும் இப்பள்ளி யில் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களை கவரும் நோக்கிலும் பல்வேறு சிறப்பு அம்சங்களை தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களை கவரும் விதமாகவும், சேர்க்கை விகி தத்தை அதிகரிக்கும் விதமாகவும் பள்ளி யிலுள்ள வகுப்பறை கட்டிடம் ஒன்றை புனரமைத்து, ரயில் போன்று வர்ணம் தீட்டி, ‘மாணவர்கள் சந்திப்பு’ என பெயர் சூட்டி, நிஜ ரயில் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளது போன்று உருவாக்கி யுள்ளனர். திமுக தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதரின் சொந்த நிதி உதவியில், பரசலூரை சேர்ந்த ஓவியர் க.சிவா கைவண்ணத் தில், ரயில் போன்ற வகுப்பறை கட்டி டத்தை அமைத்துள்ளனர். கோடை விடு முறைக்கு பின்னர் திங்களன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் புதிய வகுப்பறை கட்டிடத்தை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவ குழந்தைகள், தாங்கள் பயிலும் பள்ளியில் ரயில் வண்டி நிற்ப தாக நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைந் தனர். மாணவ குழந்தைகளை கவரும் விதமாக வகுப்பறையை ரயில் வண்டி போன்று வடிவமைத்துள்ள மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நிர்வாகத்தின் முன் முயற்சியை பெற் றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். அரசு பள்ளியென்றால் அழகின்றி, பொலிவின்றி இருக்கும் என்ற நிலையை உடைத்தெறியும் விதமாக, ஏராள மான அரசு பள்ளிகள் தனியார் பள்ளி களுக்கு சவால் விடும் வகையில் மாறி வருகின்றன. அந்த வரிசையில் மாத்தூர் அரசுப் பள்ளியும் அழகாக மாற்றப்பட்டி ருப்பது மாணவர் சேர்க்கை சதவீதத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேக மில்லை.