திருச்சிராப்பள்ளி, நவ.28- திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பில் கார்டியாக் கனெக்ட் எனும் தலைப்பில் ஒருநாள் தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள், இதய நோய் மருத்து வர்கள், பொது மருத்துவர்கள் என 170 பேர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பத்திரிகையானர் சந்திப்பில் அப் பல்லோ மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி நீல கண்ணன், இதய நோய் மருத்துவர்கள் காதர்சாகிப், ஃயீயாம் சுந்தர், ஸ்ரீகாந்த் பூமனா, ரவிச்சந்திரன், டாக்டர் விஜயசேகர், சரவணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறிய தாவது: வாழ்வியல் மாற்றம், உணவு, முறையான உடற்பயிற்சி யின்மை காரணங்களால் வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே நாம் சிகிச்சையை தொடங்க முடியும். மார டைப்பு ஏற்பட்டவருக்கு அதே இடத்தில் பொதுமக்கள் முதலுதவி அளிக்க முடியும். சிபிஆர் மற்றும் ஏஇடி உபகரணத்தை பயன்படுத்தி முதலுதவி அளிப்பதன் மூலம் நின்று போன இதயத்தை செயல்படுத்த முடியும். இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருப்ப தால் 10 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் ஒருவர் மட்டுமே காப்பாற்றப்படுகிறார். எனவே அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பொது மக்களுக்கு சிபிஆர் பயிற்சி மற்றும் ஏஇடி உபகர ணத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சியை மக்கள் அதி கம் கூடும் இடங்களான ரயில்வே ஸ்டேசன், பேருந்து நிலை யம், கோவில்கள், விமானநிலையங்கள் பகுதிகளில் தொடர்ந்து வழங்க உள்ளோம். அப்பல்லோ மருத்துவ மனையில் இதய துடிப்பு பிரச்சனைகளுக்கு எலக்ட்ரோ பிஸியாலஜி டாக்டர்கள் பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடி சாதனம், 3டி மேப்பிங் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.