தஞ்சாவூர், செப்.3 - தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி சௌராஷ்டிரா தெருவை சேர்ந்த பிரபு ராம் என்பவர் வீட்டில் புதிதாக ஒரு உயிரினம் தென்படுவதாக வனத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் வனச்சர கர் ரஞ்சித் ஆலோச னையின் பேரில், அரு கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட் டளையைச் சேர்ந்தோர், பிரபுராம் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, அது அரியவகை மரநாய் என்பது தெரியவந்தது. உடனடியாக, அந்த மரநாயை பத்திரமாக மீட்ட அவர்கள், வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி முன்னிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர். அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரின பட்டியலில் உள்ள இந்த மரநாய் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாகும். நகரப் பகுதியில் அரிதாக இந்த மரநாய்கள் தென்படுகிறது. இந்த மரநாய்கள் தென்னை மரத்தில் ஏறி இளநீரை மட்டுமே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.