districts

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது

பாபநாசம், ஆக.9 -

     தஞ்சாவூர் விற்பனைக் குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்குமுறை விற்ப னைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 2,345 விவசாயிகள் சராசரி 3800 குவிண்டால் பருத்தி  எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்பு ரம், சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 வணிகர்கள் கலந்து கொண்டு, அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7439, குறைந்தபட்சம் ரூ.6909, சராசரி  ரூ.7209 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு சராசரி-ரூ.2.73 கோடி.