புதுக்கோட்டை, ஏப்.27- \
புதுக்கோட்டை நகரில் மூடப்பட்ட டாஸ் மாக் மதுக்கடையை மீண்டும் திறப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தக் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடை நீண்ட போராட் டங்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்த நிலையில், இக்கடையை மீண்டும் வியாழக்கிழமை முதல் திறக்கப் போவ தாக தகவல் பரவியது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்தக் கடையின் முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, நகரச் செயலாளர் சோலையப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நாக ராஜன், ஜனார்த்தனன், நாராயணன், நக ரக்குழு உறுப்பினர்கள் ஜெயபாலன், ரகு மான், பாண்டியன், ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், டாஸ்மாக் அலுவ லர்களிடம் பேசினர். இதையடுத்து டாஸ் மாக் பதாகை அகற்றப்பட்டது. இதன் பின் னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.