districts

img

தள்ளுவண்டியாக மாறிய பேட்டரி வாகனம்

பொன்னமராவதி, டிச.8 -  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதி களில் உள்ள ஆடு அடிக்கும் தொட்டி  கழிவு, கோழிக் கடைகளில் உள்ள கழிவு மற்றும் மீன் இறைச்சி கடை  கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவு களை பொன்னமராவதி பேரூராட்சிப்  பணியாளர்கள் தினமும் அப்புறப் படுத்துகின்றனர். அவர்களுக்கு பேரூராட்சியின் சார்பில் பேட்டரி வாகனம் கொடுக் கப்பட்டது. இந்நிலையில், பல நாட்களாக அந்த பேட்டரி வாகனம் செயல்படாததால், தொழிலாளர்கள் வண்டியை கையில் தள்ளி கொண்டு  செல்கின்றனர். இதனால் தொழிலா ளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளா கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் உட னடியாக தொழிலாளர்களுக்கு நல்ல நிலையில் இயங்கக் கூடிய பேட்டரி வண்டி களை வழங்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டு உள்ளது.