தஞ்சை தொகுதியில் 68.27 சதவீத வாக்குப்பதிவு
தஞ்சாவூர், ஏப்.21- தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார் குடி சட்டமன்றத் தொகுதியில், மொத்தம் 67.63 சதவீதமும், திருவையாறு சட்டமன்றத் தொகுதியில்72.15 சதவீதமும், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 62.09 சதவீதமும், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 68.90 சதவீதமும், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 67.32 சதவீத மும், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 72.50 சதவீத வாக்குகளும் பதிவாகின. தஞ்சை நாடாளுமன்றத் தொகு தியில் மொத்தம் 68.27 சதவீத வாக்குகள் பதிவாகின.
பாரம்பரிய போர்க்கலை மீட்பு செயல்முறை விளக்கப் பயிற்சி
தஞ்சாவூர், ஏப்.21- சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளை யின், பேராவூரணி கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி 5 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிவனாம்புஞ்சை தாய்மண் பாலம் ஆட்டச்சாலை இணைந்து நடத்திய பாரம்பரிய போர்க்கலை மீட்பு, செயல்முறை விளக்கப் பயிற்சி, பேரா வூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, புதுதில்லி காவல்துறை ஆணையர், ஐபிஎஸ் அலுவலர் ஆர்.சத்தியசுந்தரம் தலைமை வகித்தார். தாய் மண் பாலம் அமைப்பின் நிர்வாகி பாலமுருகன், பேராவூரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், சோழ நாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளையின் நிர்வாகி சசிகலா நீலகண்டன், கௌரவத் தலைவர்கள் தென்னங் குடி ராஜா, கறம்பக்காடு குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய போர்க்கலை மீட்பு குறித்த பயிற்சி, தாய்மண் பாலம் ஆட்டச்சாலை மாணவர்களைக் கொண்டு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பேராவூரணி பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்முறை பயிற்சி வகுப்பு இலவசமாக தொடர்ந்து நடைபெற உள்ளது. முன்னதாக, பயிற்சியாளர் சுப்பிரமணியன் வரவேற் றார். உடற்கல்வி ஆசிரியர் எம்.சோலை நன்றி கூறி னார்.
வெயில் தாக்கத்திலிருந்து தற்காக்கும் வழிமுறைகள்
பாபநாசம், ஏப்.21- தமிழகத்தில் நாளுக்கு, நாள் வெயிலின் கடுமை அதி கரித்து வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் வெயிலின் கடு மையால் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏப்.20 முதல் மே 4 வரை, வெயிலின் தாக்கம் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தப்பிப்ப தற்கான வழிமுறைகள் குறித்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் பால சுப்பிரமணியன் கூறுகையில், “தினமும் 3 லிட்டர் முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நீராகாரம், லெமன் ஜூஸ் அருந்தலாம். வெள்ளரி, தர்ப்பூசணி எடுத்துக் கொள்ளலாம். இளநீர், நுங்கு, நீர் மோர் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். தினமும் காலை, மாலை இரண்டு முறை குளிக்க வேண்டும். உடலில் வெப்பத்தை தரக்கூடிய கோழி இறைச்சி உண வைத் தவிர்க்க வேண்டும். நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், சௌசௌவை உணவில் சேர்த்துக் கொள்ள லாம். காரமான உணவு, மசாலா உணவைத் தவிர்க்க வேண்டும். தினமும் காலை 11 முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். ஆடைகளை இறுக்கமின்றி, தளர்வாக அணிய வேண்டும்” என்றார்.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்
பாபநாசம், ஏப்.21 - கோடை விடுமுறையில் தனியார் பள்ளி கள் சிறப்பு வகுப்புகள் நடத்துவது சரியல்ல என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹி ருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 105 டிகிரி செல்சிய ஸுக்கு மேல் வெப்பநிலை இருக்கிறது. முதியவர்களும், பொதுமக்களும், நோயா ளிகளும் இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சில தனியார்ப் பள்ளிகள் கோடை விடுமுறைக் காலங்களில் 10, 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாகத் தக வல்கள் வருகின்றன. சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து, தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவ தாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் புகார் அளித்த வண்ணம் இருக்கிறார்கள். இது மாணவர்க ளின் மீது உளவியல் சார்ந்த மன அழுத் தத்தை உருவாக்கும். கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற் காக, தனியார் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனு மதிக்க முடியாது. எனவே பள்ளிக் கல்வித்துறை உடனடி யாக இந்த விஷயத்தில் தலையிட்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தாமல், மாணவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாலிபரை அடித்துக் கொன்ற 2 பேர் கைது
தூத்துக்குடி,ஏப்.21- தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜாகீர் உசேன் நகர் காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, வாலிப ரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தூத்துக்குடி தாளமுத்துநகரை அடுத்த அ.சண்முக புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (27) என்பதும், மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை சில நபர்கள் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்து நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி ஜே.ஜே., நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வின் ராஜா (23), மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வரு கின்றனர்.
காணாமல் போன வியாபாரி சடலமாக மீட்பு
தூத்துக்குடி,ஏப்.21- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கூசா லிப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்தவர் ராஜாமணி மகன் அருட் செல்வம் (40). தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தினசரி சந்தை யில் காய்கனி கடை நடத்தி வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் மகனும், ஒன்றை வயதில் மகளும் உள்ளனா். கடந்த 16ஆம் தேதி காலை 6 மணிக்கு சித்ரா காய்கனி கடைக்கு சென்றாராம். அதைத் தொடா்ந்து வீட்டை விட்டுச் சென்ற அருட் செல்வம் வீடு திரும்பவில்லை எனக்கூறி அவரது மனைவி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவ ரைத் தேடி வந்தனா். இந்நிலையில் கோவில்பட்டி-கடலையூா் சாலையில் உள்ள ஊா்க்காவல் சாமி கோயில் அருகே உள்ள பாலத்துக்கு அடியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விசா ரணையில், அவா் காணாமல் போன அருட்செல்வம் என்பது தெரியவந்தது. இவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாலிபர் கத்தியால் குத்திக் கொலை
நாகர்கோவில், ஏப்.21- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஏப்ரல் 20 சனிக்கிழமை நள்ளிரவில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். நாகர்கோவில் இடலாக்குடி சபையார் குளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் மகன் ஆகாஷ் (20). இவரது நண்பன் சஜித் (20). இருவரும் சனிக்கிழமை இரவு சாஸ்திரி நகர் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆகாஷ், சஜித் இருவரையும் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். ஆத்திர மடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆகாஷ் மற்றும் சஜித் இரண்டு பேரையும் குத்தி விட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்க னவே இறந்து விட்டாதாக கூறினார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டார் காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? மற்றும் கொலை செய்த மர்மநபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. இது குறித்து இடலாக்குடி கச்சப்புரத்தெருவை சேர்ந்த ஷேக் செய்யது அலி என்ற பைசல் (28), சுசீந்திரத்தை சேர்ந்த தில்லை நம்பி (25) உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனி படை காவலர்கள் பைசல், தில்லை நம்பி இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரு வரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுசீந்திரம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட தில்லை நம்பி பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும். தலை மறைவாகியுள்ள மற்ற 4 பேரை பிடிக்க தனிப்படை காவலர்கள் தீவிர நடவடிக்கை மே ற்கொண்டு வருகிறார்கள்.
நில புரோக்கர் வெட்டிக் கொலை தப்பிச் சென்ற கும்பல் யார்?
திருநெல்வேலி ,ஏப். 21- நெல்லை சந்திப்பில் தொழில் போட்டி காரணமாக கோவில் பட்டியை சேர்ந்த நில புரோக்கர் வெட்டிக் கொலை செய் யப்பட்ட சம்பவத்தில் சிசி டிவி கேமிரா பதிவுகளின் அடிப்படை யில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சிலரை பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரி முத்து மகன் காளிராஜ் (45), நில புரோக்கர். இவருக்கு வளர்மதி (40) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு, பாபுஜிந கர் அருகேயுள்ள மணிநகர் 2வது தெருவில் காளிராஜ் சனிக்கிழமை மாலை வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷ னர் கீதா,உதவி கமி ஷனர்கள் வெங்கடேஷ், செந்தில்குமார், சந்திப்பு காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காளிராஜிக்கும், கோவில்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் தொழில் ரீதியாகவும், நில விற்பனை தொடர்பான விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலிலும் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காளிராஜ், கோவில் பட்டியை சேர்ந்த சிலருடன் மூணாறு உள்ளிட்ட பகுதிக்கு காரில் சுற்றுலா சென்று விட்டு சனிக்கிழமை மதியம் நெல்லை சந்திப்புக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் மது அருந்த வேண்டி காரை ஒரு ஒதுக்குபுறமாக நிறுத்தி உள்ளனர். அப்போது காருக்குள்ளே காளிராஜை கொலை செய்ய முயன்றுள்ள னர். அவர் தப்பித்து வெளியே ஓடியபோது விரட்டிச் சென்று அரி வாளால் வெட்டிக் கொன்றனர். பின்னர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இவ்வ ழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில் அமைக்கப்பட் டிருக்கும் சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீ சார் ஆய்வு செய்தனர். அதில் சந்திப்பு சாலையில் இருந்து மணி நகர் பகுதிக் குள் கார் திரும்பி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அப்பகுதியில் இரு பைக்குகளில் மர்ம நபர்கள் காரை பின்தொ டர்ந்து சென்ற பதிவுகளின் அடிப்படை யில் போலீசார் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை
திருநெல்வேலி, ஏப். 21- நெல்லை, தென்காசி. உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெயில் கார ணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து அதிக ரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்கறி களின் விலை உயர்ந்துள்ளது நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை வழக்கமாக மானூர் சுற்றுவட்டார பகுதி கள், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும். தற்போது அங்கே விளைச்சல் இல்லாததால் ஆந்திராவில் இருந்து அதிக அளவில் தக்காளி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் கார ணமாக கடந்த சில நாட்களாக ரூ.25 வரை விற்பனையான தக்காளி விலை சனிக்கிழமை ஒரு கிலோ ரூ.35-க்கு விற்ப னையானது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மேலும் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது.
மெர்க்கன்டைல் வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி,ஏப்.21- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கியில் தற்போது மேனேஜிங் டைரக்டர், தலைமைச் செயல் அதிகாரி (Managing Director and Chief Executive Officer) பணி யிடங்கள் காலியாக உள்ளன. அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற் படிப்பு (Graduate Degree அல்லது Post Grad uate Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.03.2024 அன்றைய தேதியின்படி, விண் ணப்பதாரர்கள் 45 வயது முதல் 62 வய துக்குள் உள்ளவராக இருத்தல் வேண்டும். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் டிஎம்பி (TMB) வங்கி விதிமுறைப்படி மாத ஊதியத்தை பெறுவார்கள். பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படு வார்கள். பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வ முள்ளவர்கள் இணைய தளம் மூலம் ஆன்லை னில் பதிவு செய்து கொள்ளலாம். 05.05.2024 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tmb net.in/tmb_careers/newregisterbase.do?id=MDC&post=MDC20242501 என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிய லாம். இந்த பணியிட விளம்பர அறிவிப்பு தொ டர்பான விவரங்களைப் பெற https://www. tmbnet.in/tmb_careers/doc/ADV_MDC 20242501.pdf என்ற இணையதள முகவரி யைக் கிளிக் செய்து காணலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.