புதுக்கோட்டை, ஜன.20 - முக்காணிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற ஜல்லிக்கட்டில் 611 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டி 17 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது. போட்டியை வருவாய் கோட்டாட்சியர் முருகே சன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, இராம நாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 611 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 7 குழுக்களாக 175 மாடுபிடி வீரர்கள் களமிறக் கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 17 பேர் காய மடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்த னர். பலத்த காயமடைந்த ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காளைகளை அடக்கிய வீரர்களுக் கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பாத்திரங்கள், மிதிவண்டிகள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூரைச் சேர்ந்த கவாஸ்கர், 24 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீர ராகவும், கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் காளை சிறந்த காளையாகவும் தேர்வு செய்யப்பட்டன. அவர்கள் இருவருக்கும் தலா ஒரு மோட்டார் சைக்கிள் பரிசளிக்கப்பட்டது. புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பா ளர் ராகவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.