பெரம்பலூர், ஜன.22- இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டி யலினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித்தலை வருமான க.கற்பகம் ஜனவரி 22 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,334 ஆண் வாக்காளர்களும், 4,330 பெண் வாக்காளர்களும், இதர 4 வாக்காளர் களும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,721 ஆண் வாக்காளர்களும், 3,482 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டிய லில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,626 ஆண் வாக்காளர்களும், 1,606 பெண் வாக்காளர் களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 619 ஆண் வாக்காளர்களும், 771 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளை யும் சேர்த்து மொத்தம் 5,71,748 வாக்கா ளர்கள் உள்ளனர். இதில் 2,80,301 ஆண் வாக்காளர்களும், 2,91,435 பெண் வாக்கா ளர்களும், 12 இதர வாக்காளர்களும் உள்ள னர். 9,249 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க் கப்பட்டுள்ளனர் ஜனவரி 22 முதல் தொடர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளபட வுள்ளன. எனவே, வாக்காளர் தொடர் திருத் த்தத்தின் போது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவர்கள் ஜனவரி 22 முதல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய அலுவலகங்களில் படிவம் 6, 7 மற்றும் 8 அளித்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.