districts

திருச்சி முக்கிய செய்திகள்

பறக்கும் படை கைப்பற்றிய  ரூ.18.55 லட்சம் விடுவிப்பு

தஞ்சாவூர், ஏப்.18 -  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சட்ட மன்ற தொகுதிகளில் பறக்கும் படைகுழு பரிசோதனையில் ஈடுபட்டிருந்தது.  அப்போது கனரக வாகனத்தை சோதனை செய்த தில், தேர்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக  ரூ.74,000,  ரூ.59,000, ரூ.7,46,800, ரூ.60,250, ரூ.73,000, ரூ.66,000,  ரூ.97,000, ரூ.3,69,000, ரூ.68,300, ரூ.69,090, ரூ.78,600  மற்றும் ரூ.94,400 என மொத்தம் ரூ.18,55,440 பறிமுதல்  செய்யப்பட்டு சார்நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, ஏப்.17 (புதன்கிழமை) அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் படியும் தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தொகை உடனடியாக விடு விக்கப்பட்டது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக்  ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

உடையார்பாளையம்  வாக்குப் பெட்டி அனுப்பும் பணியில் குழப்பம்

அரியலூர், ஏப்.18 - ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளை யம் வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி களுக்கு வாக்கு பெட்டி அனுப்பும் பணியில் பல் வேறு குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வெள்ளியன்று நடைபெற உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப் பதிவு எந்திரங்கள் அனுப்பும்  பணிகளை அந்தந்த மாவட் டங்களில் தீவிரமாக செய்து வருகின்றனர்.  அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவின் பேரில், வாக்குச் சாவடிக்கு, வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான நேரத்தில் அனுப்ப  வேண்டும் என தேர்தல் அலு வலர்களுக்கு உத்தரவிட்டி ருந்தார்.  இந்நிலையில் ஜெயங் கொண்டம் சட்டமன்ற தொகு திகளுக்குட்பட்ட வாக்குப் பதிவு எந்திரங்கள் உடை யார்பாளையம் வருவாய்  கோட்டாட்சியர் அலுவல கத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கு பணியில் ஈடு பட்டிருந்த அலுவலர் களுக்கு போதிய முன் அனு பவம் இல்லாததால் வாக்குப் பதிவு எந்திரங்களை அனுப் பும் பணிகளில் குழப்பம் ஏற்பட்டு, சரியான நேரத்தில்  அனுப்ப முடியாமல் திணறி னர்.  இதனால் காலதாமதம் ஏற்பட்டு, பின்னர் மதியம் 1:30  மணியளவில் அந்தந்த வாக்குச்சாவடி மையங் களுக்கு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் அனுப்பி வைக்கப் பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியிலேயே இவ்வளவு சுணக்கம் ஏற்பட் டுள்ள நிலையில், வாக்குப் பதிவை சிறப்பாக நடத்தி அதனை மீண்டும் பெற்று பாதுகாப்பு அறைக்கு சரியான  முறையில் கொண்டு செல் வார்களா? என்ற அச்சம் தற்போது வாக்காளர்கள், அரசியல் கட்சியினரிடையே எழுந்துள்ளது. மேலும் அது  தொடர்பான அதிகாரி களுக்கு முறையாக தெளிவு படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

பெரம்பலூர் அருகே  அதிமுக பிரமுகரின் காரில்  ரூ.8.50 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர், ஏப்.18 - பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சத்யா தலைமையிலான பறக்கும் படையினர் வியாழனன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அதிமுக ஆலத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சசிக்குமாருக்கு சொந்தமான காரில் சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.8.50 லட்சம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்து பெரம்பலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் மாலை 4 மணியளவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த பணம் வெங்காய வியாபாரிகளுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்ட பணம் எனக்கூறி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்து விளக்கமளித்தனர். உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறியதால் திரும்பி சென்றனர்.

 

;