districts

img

146 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

கும்பகோணம் நவ 20 தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  மற்றும் சென்னை  மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான  தேசிய நிறுவனம் இணைந்து நடத்திய கும்பகோணம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகர ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்து ரூ.7,36,271 மதிப்பீட் டில் மூன்று சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், காதொலி  கருவிகள், செயற்கை கால், கைத்தடி மற்றும் மனவளர்ச்சி  குன்றியவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் உள்ளிட்ட உபகர ணங்களை 146 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.