எம்.எம்.சாமி சிலம்பப் பள்ளி சார்பில் 13 ஆம் ஆண்டு சிலம்ப விளையாட்டுப் போட்டி நடந்தது. தஞ்சாவூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், பாபநாசத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் ஆசிரியர் ஜெயராஜ் தலைமையில் பங்கேற்றனர். இதில் முதல் பரிசை 15 பேரும், 2 ஆம் பரிசை 12 பேரும், 3 ஆம் பரிசை 23 பேரும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள், பெற்றோர் பாராட்டினர்.