districts

img

சிபிஎம்-ல் இணைந்த வேங்கனூர் கிராம மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகேயுள்ள வேங்கனூர் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகேயுள்ள வேங்கனூர் பகுதி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்களுக்கு பள்ளிக்கூடம், எஸ்.கே.நகர் பகுதியில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கு பட்டா, குடிநீர் வசதி, சுடுகாடு என கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது.

இதனையடுத்து புதனன்று இப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

இதற்காக நடைபெற்ற இணைப்பு விழாவிற்கு கட்சியின் வேங்கனூர் கிளைச்செயலாளர்கள் வேங்கன், அமராவதி ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ்.பி.பாலசுப்ரமணி, அய்யப்பன், பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் கே.அருள்செல்வன், டி.முத்துச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் மலைச்சாமி,  முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எம்.கே.சம்சுதீன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப்பொருளாளர் கண்ணன், முன்னாள் சித்துவார்பட்டி  ஊராட்சி மன்றத்தலைவர் ஜமால்முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்று கட்சியில் இணைபவர்களை வரவேற்றனர்.

;