districts

img

ஏற்காடு சேர்வராயன் மலையில் உற்பத்தியாகும் உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.25- ஏற்காடு சேர்வராயன் மலை யில் உற்பத்தியாகி வரும் உபரி நீரை  வறண்டு கிடக்கும் ஏரிகளில் நிரப்ப  வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டியை அடுத்த ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் உபரி நீரானது ஆணைமடுவு வழியாக பொம்மிடி ஊராட்சியில் உள்ள வேப்பாடி ஆற்றில் கலக்கிறது. பருவ மழை  காலங்களில் பெய்யும் மழையால்  வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே  இந்த ஆற்றில் தண்ணீர் செல்கின் றது. அதுசமயம், இவ்வாற்றில் செல்லும் நீரானது தருமபுரி மாவட்டத்தில் எந்த ஒரு ஏரியிலும் தேக்கி வைக்கப்படாமலும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்ப டாமலும் வீணாகிக் சென்றுவிடு கின்றது. அவ்வாறு, வீணாகி செல் லும் உபரி நீரை கரடிகுட்டை,  சின்னகவுண்டண் ஏரி, கர்த்தான்  குட்டை, ரெட்டி குட்டை, பாய்க் கரை, சந்தப்பேட்டை உள்ளிட்ட ஏரிகளுக்கு இராட்சத பம்புகள் மூலம் நீரை நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் அதிகரிக்கும். இதனால் பொது மக்களின் குடிநீர்த் தேவைகள் மற்றும் விவசாயத் தேவைகள் பூர்த்தி அடைய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, தருமபுரி மாவட் டத்தில் தெண்பெண்ணை ஆறு செல்லும் பகுதியில் கே.ஈச்சம்பாடி அணைக்கு அருகேயுள்ள சுமார் 30  ஏரிகள் பயன்பெறும் வகையில் இராட்சத பம்புகள் அமைத்து நீர்  நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல்,  ஏற்காடு சேர்வராயன் மலையின் வழியாக உற்பத்தியாகி வரும் உபரி நீரை வேப்பாடி ஆற்றின் மூலம்,  மற்ற ஏரிகளுக்கு எடுத்துச் செல்ல  தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முயற்சிகள் மேற்கொள்ள வேண் டும். இதனால், அச்சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 1700 ஏக்கர் விவசாயி நிலங்கள் பாசன வசதி  பெற்று, விவசாயிகளின் வாழ்வா தாரம் பெருகும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

;