கெயில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து போராடி உயிர்நீர்த்த கணேசன் குடும்பத்திற்கு கெயில் நிறுவனம் இழப்பீடு வழங்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி என்ற பெயரால் ஐடிபிஎல்,விடிபிஎல்,உயர் மின் கோபுரம் அமைத்தல் ,எட்டுவழிச்சாலை அமைக்க முயற்சிப்பது, தற்போது கெயில் நிர்வாகம் விவசாய நிலத்தின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டம் விவசாயிகள் போராட்டத்தால் கைவிடப்பட்ட நிலையில் இப்போது விவசாயிகளின் கருத்துக்கு மாறாக நிலஅளவீடு செய்யப்பட்டு வந்ததால் தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்து போராடி வந்தது .
பென்னாகரம் வட்டம் கரியப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் (42) கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக கணேசனுடைய 64 சென்ட் நிலத்தை அளவீடு பணி மேற்கொண்டனர்.
இதனை எதிர்த்து கணேசன் தன்னுடைய நிலத்தில் தூக்கு மாட்டிகொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
கணேசன் மறைவையடுத்து மாநில முதல்வர் அவர்களால் கணேசன் குடும்பத்திற்கு ரூ 5 இலட்சம் இழப்பீடு அறிவித்து அவரது குடும்பத்திற்கு வழங்கினார்.
ஆகவே, கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை வழியாக கொணடு செல்லவேண்டும். கணேசன் குடும்பத்திற்க்கு வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லை எனவே இவரது குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்து பேசினார்.
மாநில தணைத்தலைவர் டி.ரவீந்திரன், மாநிலசெயலாளர் பி.டில்லிபாபு, மாவட்டசெயலாளர் சோ.அருச்சுணன், மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன் ,மாவட்ட பொருளாளர் எஸ்.கே.கோவிந்தன் மாவட்ட நிர்வாகிகள் இ.பி.பெருமாள்,கே.அன்பு ,எஸ்.தீர்த்தகிரி,ஆர்.சின்னசாமி ,சி.வஞ்சி ஆர்.சக்திவேல்,மீன்முருகன், மற்றும் வேலு, மணி,கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார்,மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து,பேரூராட்சி கவுன்சிலர் வே.விசுவநாதன்,ஆர்.மல்லிகா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அ.ஜிவானந்தம் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி ஆகியோர் வாழ்த்திபேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தலைவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். தடுத்த போலீசார் உள்ளே விட மறுத்தனர்.இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பின்னரே போலீசார் அனுமதித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கெயில் நிர்வாகத்திடமிருந்து இறந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுதருவதற்க்கும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
மேலும்,கெயில் எரிவாயு குழாய் விவசாயிகள் நிலங்களில் பதிக்கும் முடிவை கைவிடவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
விவசாய கணேசன் இறப்பு குறித்து நீதிபதி தலைமையில் பொது விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக இன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் மாநிலதுணைத்தலைவர் டி.ரவீந்திரன், ,மாநிலசெயலாளர் பி.டில்லிபாபு, ,மாவட்டசெயலாளர் சோ.அருச்சுணன்,மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன் பகுதி செயலாளர் சக்திவேல் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் பகுதி செயலாளர் ஆர்.சின்னசாமி ஆகியோர் பென்னாகரம் வட்டம் கரியப்பன அள்ளி கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட கணேசன் வீட்டிற்க்கு நேரில் சென்று கணேசனின் உருவப்படத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கணேசன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் பேசியதாவது ,
கெயில் குழாய் பதிப்பை விவசாயிகள் எதிர்த்து போராடியதின் விளைவாக அதிமுக அரசு விவசாயிகளை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் நிறைவேற்றாது என கொள்கை முடிவாக கெயில் திட்டத்தை கைவிட்டது.
தற்போதைய தமிழக அரசும் இத்திட்டம் குறித்து அறிவிக்காத நிலையில் கெயில்குழாயை விவசாய நிலத்தில் பதிக்கும் கெயில் நிர்வாகத்தின் நடவடிகைக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக காவல்துறையையும் ,வட்டாட்சியரையும் அனுப்பியுள்ளனர்.
இதற்க்கு தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கெயில் குழாய் விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டால் 7 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், மா,தென்னை,பனை ஆகிய மரப்பயிர்கள் பாதிக்கப்படும்,விவசாயம் செய்யமுடியாது, நிலத்தின் மதிப்பு அகலபாதளத்தில் சென்றுவிடும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.என விவசாயி நிலம் வழியாக கெயில் குழாய் பதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும் .
திமுக தேர்தல் வாக்குறுதியின் போது எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என தெரிவித்தது. எதிர்கட்சியாக இருந்த போது எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும் என்று தறபோதைய தமிழக முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் மனுகொடுத்தார்.
தற்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார். எட்டுவழிசாலைத்திட்டத்தால் 10,000, விவசாயநிலம் பாதிக்கப்படும். 100 நீர்நிலைகள் அழிந்துபோகும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் காணாமல் போகும். எனவே எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து முதல்வர் கொள்கை நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்.பல்வேறு சாலைகள் இருக்கும் போது எட்டுவழிச்சாலை திட்டம் தேவையற்றது.
இதனை தமிழக அரசு கைவிடவேண்டும்.விவசாயிகளின் அனுமதியின்றி நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 -ஐ தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்து போராடும் என தெரிவித்தார்.