districts

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்திட கோரிக்கை

கும்பகோணம், செப்.18- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தோழர் நாகசந்தி ரன் நினைவு கொடி கம்ப கொடியேற்று விழா  மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. கொடியேற்று விழாவிற்கு வட்டார தலைவர் வேணி தலைமை வகித்தார். வட்டார  செயலாளர் காளிதாசன் வரவேற்றார். சங்க  கொடியினை மாநில பொதுச் செயலாளர்  சா.மயில் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார்.  அதனைத் தொடர்ந்து திருவிடைமரு தூர் தனியார் மண்டபத்தில் மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலா ளர் சா.மயில் சிறப்புரையாற்றினார். மாநில  துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளர் கோ.வீரமணி, மாவட்டச் செய லாளர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ரா.கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை ஆற்றினர். தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 116 ஆவது வரியில் இடம் பெற்றிருக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை கலைந்திட, உறுதி யளித்தபடி முரண்பாடுகளை உடனே நிவர்த்தி செய்திட வேண்டும்.  

ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடிய உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பறிக்கப்பட்ட  நிலையில் உள்ளதால், மீண்டும் உயர் கல்விக் கான ஊக்க ஊதியத்தை அமல்படுத்தி வழங்கிட வேண்டும். மத்திய அரசு அகவிலைப் படி அறிவிக்கும் போதெல்லாம் தமிழக அரசு  அதே தேதியில்  அகவிலைப்படி வழங்க வேண்டும். கிராமங்களில் வசிக்கும் ஆசிரி யர்களுக்கு இணைய வசதி இல்லாததால், இணையவழி பதிவு செய்தல் உத்தரவை பள்ளிக் கல்வித்துறை திரும்பப் பெற வேண்டும்.  தற்போது காலாண்டு தேர்வு முடிந்தவுடன் பள்ளி விடுப்பு நேரத்தில் ஆசிரியர்களுக்கு மட்டும் எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி அறி விக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுப்பு காலத்தில்  இது போன்ற பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;