districts

வெண்டாக்கோட்டை அணையைத் தூர்வார வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், செப்.24 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.  இதில் வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, கூட்டுறவு சங்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம், மின்வாரியம்,  கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை களின் அலுவலர்கள் மற்றும்  விவசாயி கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், விவசாயி பொன்ன வராயன்கோட்டை வா.வீரசேனன் பேசு கையில், பட்டுக்கோட்டையில் இருந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியை இணைக்கும் வகையில், புதிய  அகல ரயில் பாதைத் திட்டம் கடந்த  2011-12 ஆம் ஆண்டு ரயில்வே நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது.  இந்த பாதை அமைப்பதற்காக திரு வாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத் தில் 15 வருவாய் கிராமங்கள், தஞ்சை  மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில்  14 வருவாய் கிராமங்கள் தேர்வு செய் யப்பட்டன. இந்த 29 கிராமங்களும் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மூலம் பாசன ஆதாரம் பெற்று, மூன்று  போக சாகுபடி செய்யக்கூடிய விவசாய  கிராமங்கள் ஆகும்.  புதிய ரயில் பாதை அமைக்க விவ சாய நிலங்கள் 500 ஏக்கர் அளவுக்கு கையகப்படுத்தும் நிலை உள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இரு புறங்களில் உள்ள நிலங்களில் 30  மீட்டர் தூரத்திற்குள், ரயில்வே அனுமதி  பெற்று தான் விவசாய கிணறு அமைத்தல், கட்டுமான பணிகள் மேற் கொள்ள முடியும். இதனால் இப்பகுதி யில் உள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாய  நிலங்கள் பயனற்று போய்விடும்.

 தற்போது அமையவுள்ள புதிய ரயில் பாதை தெற்கு வடக்காக அமைக் கப்படுகிறது. டெல்டா மாவட்டங்க ளில், மழைக்காலங்களில் வெள்ள  நீரானது மேற்கிலிருந்து கிழக்கில் வடிந்து, வங்கக் கடலில் கலக்கிறது.  புதிய ரயில் பாதை அமைக்கப்பட் டால், சுமார் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு  மழைநீர் வடியாமல் இந்த பகுதியில்  உள்ள விவசாய நிலங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் விவசாயிகளுக்கு பல  லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படு வதுடன், உணவு உற்பத்தியும் பாதிக்கும்.  புதிய ரயில் பாதை அமைவதால் பொதுமக்களுக்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் எவ்வித பயனும் இல்லை.  மக்கள் வரிப்பணம் ரூ.1,500 கோடி வீணாகும். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும். ரயில்வே நிர்வாக மும் மாவட்ட நிர்வாகமும் புதிய ரயில் பாதை அமைப்பது தொடர்பாக பொது மக்கள் கருத்துக்கேட்பு விசாரணை எதுவும் நடத்தவில்லை. தமிழகத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பல்வேறு சிறப்பு திட்டங் களை அரசு மேற்கொண்டு வரும் நிலை யில், 1500 ஏக்கர் விளைநிலங்களை, தரிசாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்” என்றார்.  விவசாயி கே.பக்கிரிசாமி பேசுகை யில், “வெண்டாக்கோட்டை அணை 1976 இல் கட்டப்பட்டது. 5000 ஏக்கர்  பாசன வசதி பெறுகிறது. இந்த அணையை  இருபக்கமும் அகலப்படுத்தியும், ஆழப் படுத்தியும் தூர்வாரி தரவேண்டும். ஏரியை முழுமையாக தூர்வாரினால் 20  ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கலாம். செல்லிக்குறிச்சி ஏரி, துவரங்குறிச்சி அய்யனார் கோவில்  ஏரி, தாமரங்கோட்டை கொழுங்காஞ் சேரி ஏரி உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள  பெரும்பாலான ஏரி, குளங்களில் நீர் நிரப்பலாம்.  

விவசாயத்திற்கு காவிரி நீரை நம்பி இருக்க வேண்டியதில்லை. மழைநீரை சேமித்தாலே போதுமானது. மேலும், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். மேலும் பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகளை மாற்றித் தர வேண்டும்”  என்றனர். விவசாயி கரம்பயம் கலியபெரு மாள் பேசுகையில், “தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், நெல் கொள் முதல் நிலையங்களை திறந்து விவ சாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய  வேண்டும். கரம்பயம் உள்ளிட்ட பகுதி களில் இன்னும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை” என்றார். முக்கியமான விவசாயிகளின் கோரிக் கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நிர்வாக தரப்பில் நிறை வேற்றப்படக் கூடிய கோரிக்கை களுக்கு விரைவில் உரிய தீர்வு காணப் படும். சேதமான மின்கம்பங்கள் மாற்றித்  தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

;