districts

இருளில் மூழ்கி கிடக்கும் வீரையா நகர் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கும்பகோணம், செப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநக ராட்சிக்கு உட்பட்ட 14-வது  வார்டில் வீரையா நகர் உள்ளது. இதில் சுமார் 70- க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இவர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தண்ணீர்  வரி, பாதாள சாக்கடை வரி, வீட்டு வரி, அனைத்தையும் தொடர்ந்து செலுத்தி வரு கின்றனர். இதற்கு வீரையா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் நகர வாசிகள், தங்களது சொந்த செலவில் நகர் முழு வதும் 13 மின் கம்பங்களை அமைத்து வீட்டிற்கான மின் இணைப்பை பெற்று பயன் படுத்தி வந்தனர். மேலும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த நகரில், பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதி இல்லா மல் இருந்தது. இதனையும் சொந்த செலவில் அமைத்து  பயன்படுத்தி வந்தனர். தற்போது மாநகராட்சி தேர்தலுக்குப் பின்னர் நகர்  வாசிகளின் கோரிக்கையை ஏற்று கும்பகோணம் மாநக ராட்சி பாதாள சாக்கடை மற்றும் தார்ச்சாலை அமைத்து  உள்ளனர். ஆனாலும் வீரையா நகர் முழுவதும் உள்ள பயனாளிகளால் அமைக்கப்பட்ட 13 மின் கம்பங்களில் தெருவிளக்கு இல்லாமல் இரவு நேரங்க ளில் இருள் சூழ்ந்த நிலை யில் உள்ளது.  இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நிகழ் வது, விஷ ஜந்துகள் பொது மக்களை கடிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே நகரவாசிகள் அமைத்த 13 மின் கம்பங்களில், தெரு விளக்குகளை பொருத்தி ஒளிர செய்ய வேண்டும் என  பலமுறை சட்டமன்ற உறுப்பி னர் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேயர்,  துணை மேயர் ஆணையரி டம் மனுக்கள் அளித்தனர். அம்மனுக்கள் மீது இது வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்காததால், வீரையா  நகர் தொடர்ந்து இருளி லேயே மூழ்கிக் கிடக்கிறது. போர்க்கால அடிப்படையில் நகரில் உள்ள 13 மின் கம்பங்களில் தெருவிளக்கு அமைத்து ஒளிரச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

;