districts

தோப்புநாயகம் - இடையாத்தி  சாலையை சீரமைக்க கோரிக்கை

 தஞ்சாவூர், மார்ச் 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியக்  குழு கூட்டம் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு, கே.ராமசாமி, ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், “திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோப்புநாயகம் ஊராட்சியில் உள்ள யாதவர் தெரு சாலை, தோப்புநாயகம் - இடையாத்தி செல்லும் ஆற்றங்கரை சாலை இரண்டையும் உடனடி யாக செப்பனிட வேண்டும். திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார  நிலையங்களில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்குகளை உடனடியாக சரி  செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;