districts

img

மதுரை தெற்கு வெளிவீதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுரை, பிப். 10- மதுரை தெற்கு வெளிவீதி சாலையில் செயின்ட்மேரீஸ் தேவாலயம் முதல்  கிரைம் பிராஞ்ச் வரை ஒருவழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள், அரசு பேருந்துகள் செல்கின்றன.  சாலையில் ஆங்காங்கே பள்ளங்களும் சிதிலமடைந்தும் உள்ளன. புது மாகாளிப்பட்டி செல்லும் சாலை அருகிலும் தெற்கு மாரட் வீதி குறுக்கு தெருக்களிலிருந்து வரும் வாகனங்களும் செல்வதற்கு பெரும் சிரமப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தெற்கு மாரட் வீதி 1 ஆவது குறுக்கு தெரு, தெற்கு வெளிவீதி சாலை சந்திப்பில் இரண்டு இடங்களில்  மூடியில்லாமல் குழாய்கள் உள்ளன. இதனால் விபத்து நிகழும் அபாயம் உள்ளது. எனவே குழாயை சீரமைத்து மேல் மூடி பொருத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள தெற்கு வெளிவீதி சாலையை  சீரமைக்க வேண்டும் அல்லது புதிய சாலையை அமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள வணிகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.