districts

கொத்தங்குடி கிராமத்திற்கு விஏஓ-வை நியமித்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலு காவிற்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக கிராம நிர்வாக  அலுவலர் பணியமர்த்தப்படாமல் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டப்பட்டு கிடக் கிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள்  விவசாய காப்பீடு சம்பந்தமான சிட்டா, சாதிச் சான்று, வருமானச் சான்று மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படும் சான்றுகள் பெற மிகவும் சிரமப்பட்டனர்.  இந்நிலையில், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கும்பகோணம் வட்டாட் சியரிடம், கொத்தங்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரை நிரந்தரமாக பணி அமர்த்த  வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  கடந்த மூன்று மாதங்களாக அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு கூடுதல்  பொறுப்பு அளித்து வந்தனர். இதனால் கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் பொது மக்கள் சான்றிதழ்கள் பெற அருகே உள்ள கிராமத்திற்கு சென்று, கிராம நிர்வாக  அலுவலரை சந்திக்கும் நிலை இருந்தது. இதனால் காலவிரயமும் மன உளைச்சலும் ஏற்பட்டு வந்தது.  இதனால் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு, கிராம நிர்வாக அலுவலர் நிரந்தர மாக பணியமர்த்தப்பட வேண்டும் என வலி யுறுத்தி சங்கத்தின் ஒன்றியத் தலைவர் நாகமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தினர். சங்க மாநிலச் செயலாளர் நாக ராஜன் கண்டன உரையாற்றினார். இதனைத்  தொடர்ந்து தாலுகா மண்டல அலுவலர், கொத்தங்குடி கிராமத்திற்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பில் ஒரு கிராம நிர்வாக அலு வலரை நியமித்து உத்தரவிட்டார்.

;