districts

திருவிடைமருதூர் ஊராட்சி செயலர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை

கும்பகோணம், ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் ஊராட்சி செயலர் சங்க கூட்டம் சங்க ஒன்றிய தலைவர் சி.வரதராஜன் தலை மையில் திருநாகேஸ்வரத்தில் நடைபெற்றது.  அவைத் தலைவர் சாமிநாதன், சங்க செயலாளர் குருமூர்த்தி, பொருளாளர் ரீனா,  கிளை செயலாளர் ரமேஷ்குமார், செய்தி  தொடர்பாளர் ராஜன் பாபு உட்பட திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றி யத்தில் மூன்று மாதங்களாக ஊதியம் இல்லா மல் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், துப்பு ரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்களுக்கு உடனே ஊதியம்  வழங்க வேண்டும். ஊதிய கணக்கில் நிதி இல்லாத ஊராட்சிகளில் கணக்கு எண் இரண்டிலிருந்து, கடந்த காலத்தில் நிதி மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது போன்று நிரந்தர உத்தரவிட்டு ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சியின் அடிப்படை ஊழியர்களுக்கு  ஊதியம் வழங்குதல், தெருவிளக்கு பரா மரிப்பு, குடிநீர் பணிகள், ஈமச்சடங்கு உதவித்  தொகை வழங்குதல் உட்பட பல்வேறு பணி களுக்கு உடனே நிதி வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.