districts

பயனாளிகளுக்கு நகை திருப்பித் தரப்படும் கரும்பு கடன் தள்ளுபடி தொகையை வழங்க கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஒப்புதல்

தஞ்சாவூர், செப்.23 - குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் விவசாய நகைக் கடன் பயனா ளிகளுக்கு நகையைத் திருப்பித் தரவும், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு கரும்பு கடன் தள்ளுபடி தொகை  வழங்கப்படும் எனவும், சமாதா னப் பேச்சுவார்த்தையில், கூட்டுற வுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறவிருந்த காத்தி ருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், சேது பாவாசத்திரம் ஒன்றியம், குருவிக் கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அரசு தள்ளு படி செய்த விவசாய நகைக் கடனில், பயனாளிகளுக்கு அடகு  வைத்த நகையை திருப்பித் தராததை கண்டித்தும், புதிதாக விவசாயக் கடன் வழங்க வேண்டும். ரெட்டவயல் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 2016 மற்றும் 2021  ஆம் ஆண்டுகளில், கரும்பு விவ சாயிகளுக்கு தள்ளுபடி செய்யப் பட்ட கடன் தொகையானது, விவ சாயிகள் கணக்கில் வரவு வைக்கப் படவில்லை.  இதில் 200-க்கும் மேற்பட்ட  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். பல லட்சம் ரூபாய் முறை கேடு நடைபெற்றுள்ளது. எனவே,  பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி யும், இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்காத கூட்டுறவுத் துறையை கண்டித்தும், குருவிக் கரம்பை, ரெட்டவயல் என இரு இடங்களிலும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டது.
சமாதானப் பேச்சுவார்த்தை 
இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை வட் டாட்சியர் த.சுகுமார் தலை மையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.  பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில், திருவோணம் கூட்டுறவு சார்பதிவாளர் சித்திரவேல், சேது பாவாசத்திரம் கூட்டுறவு சார்பதி வாளர் மற்றும் கள அலுவலர் சின்னப்பொண்ணு, பேராவூரணி கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் மாதவமணி, பொது விநியோகத் திட்ட முதுநிலை ஆய்வாளர் பாலசந்தர், கூட்டு றவு சங்க தலைவர்கள் செல்வ ராஜ் (ரெட்டவயல்), ஆனந்தன் (குருவிக்கரம்பை), கூட்டுறவு சங்க செயலாளர்கள் தெட்சி ணாமூர்த்தி (பேராவூரணி) சர வணன் (ரெட்டவயல்) வருவாய் ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வி (குருவிக்கரம்பை), முருகேசன் (பேராவூரணி) கிராம நிர்வாக அலுவலர்கள் நூர்ஜகான் (குருவிக் கரம்பை), செந்தில் (ரெட்டவயல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் சங்கம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், மாவட் டத் தலைவர் பி.செந்தில்குமார், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, சேதுபாவாசத்திரம் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் மணக்காடு செந்தில் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் 
சமாதான பேச்சுவார்த்தை யில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அளித்த கடும் நிர்ப்பந் தத்தை அடுத்து, குருவிக்கரம்பை  தொடக்க வேளாண்மை கூட்டுறவு  சங்கத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் 39 நபர்களுக்கு நகைக்  கடன் ரத்து செய்யப்பட்டு நகை கள் வழங்கப்படும். விவசாயி கோ. ராமசாமி, பொது நகைக்கடன் தொகையினை அதே தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் அவரு டைய விவசாய நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு, நகை கள் வழங்கப்படும்.
ரெட்டவயல் 
அதேபோல், கூட்டுறவு சங்க  விசாரணை முடிந்து நான்கு மாத  காலம் ஆகியும், விவசாயிகளுக்கு கரும்பு கடன் தள்ளுபடி தொகை வழங்கப்படாததால், விவசாயிகளின் வீண் சந்தே கத்திற்கு இடம் தராதவாறு கூட்டுறவு துறை நடவடிக்கை எடுக்கும். 2022 நவம்பர் 29 ஆம் தேதிக்குள், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்பு கடன் தள்ளுபடி தொகை அனைத்து  விவசாயிகளுக்கும் வழங்கப் படும். மேலும், தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயப் பயிர்க்கடன் வழங்கப் படும் என கூட்டுறவுத் துறை அதி காரிகள் எழுத்து மூலமாக வட்டாட் சியர் முன்னிலையில் உறுதி யளித்தனர்.
போராட்டம் ஒத்திவைப்பு 
இதனை ஏற்று நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டம்,  தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் தெரிவித் துள்ளனர்.

;