districts

img

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்தோர் முதல்வருக்கு நன்றி

தஞ்சாவூர், அக்.14- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத் தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத் தினை கடந்த செப்.5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது,  “புதுமைப் பெண்” திட்டம் ஒரு மகத்தான திட்ட மாகும். இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின  சமத்துவத்தை ஏற்படுத்து தல், குழந்தை திருமணத் தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை  காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவி களுக்கு பொருளாதார ரீதி யாக உதவுதல், பெண் குழந் தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்க்கல்வி உறுதித் திட்டத் தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளா தார பாதுகாப்பை உறுதி  செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதா யத்தை உருவாக்க வழி வகை செய்யப்படுகிறது.

அந்த வகையில், முதற் கட்டமாக 67,000 கல்லூரி,  மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதல மைச்சர் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய “புதுமைப் பெண்” பெட்டகப்பை மற்றும் வங்கி  பற்று அட்டை (Debit Card)  ஆகியவற்றை மாணவி களுக்கு வழங்கினார்கள். இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போதுவரை மொத்தம்  4,365 கல்லூரி மாணவி களின் வங்கி கணக்கில் மாதந் தோறும் ரூபாய் 1,000/- தொகை செலுத்தப்படும். பயனாளி மாணவிகள்  இத்திட்டத்தின் கீழ்,  அயோத்தியபட்டி கிரா மத்தை சேர்ந்த நான் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் இளங் கலை தமிழ் இலக்கியம் மூன் றாம் ஆண்டு படிக்கும் ரெ. கார்த்திகா, தஞ்சாவூர் மாவட் டம், பேராவூரணி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி யில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும்  விக்னேஸ்வரி ஆகியோர்  பெரிதும் பயனடைந்துள்ள தாக நன்றி தெரிவித்தனர்.

;