districts

img

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

தஞ்சாவூர், அக்.21 -  தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், சரசுவதி மகால் நூலகத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை நேரில்  சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர், நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன, எத்தனை  ஓலைச்சுவடிகள் உள்ளன, இதுவரை எத்தனை நூல்கள் அச்சிடப்பட்டு வெளி யிடப்பட்டுள்ளன என கேட்டறிந்தார். பின்னர் அவர், சுவடியியல் பிரிவு, விற் பனை பிரிவு, அருங்காட்சியகம் உள்ளிட்ட வைகளுக்கு சென்று, அங்கு உள்ளவற்றை  ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், ஒலி- ஒளி காட்சிகளை பார்வையிட்டார்.  பின்னர், நூலக மேம்பாட்டிற்கு என் னென்ன தேவை என்பதையும் அலுவலர்களி டம் கேட்டார். அப்போது அவர்கள், நூலகத் திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நூலக பணியாளர்களுக்கு 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உங்கள் கோரிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  ஆய்வின்போது டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., சரசுவதி மகால் நூலக நிர்வாக  அலுவலர் முத்தையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், நூலகர் சுதர்சன், தமிழ் பண்டிதர் மணிமாறன் ஆகி யோர் உடனிருந்தனர்.

;