districts

img

தரமற்ற முறையில் அமைக்கப்படும் நடைபாதை

தஞ்சாவூர், நவ.16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கடந்த அதிமுக ஆட்சியின் போது, அப்போதைய அதிமுக எம்எல்ஏ மா.கோவிந்தராசு பரிந்துரையின் பேரில், பேரா வூரணி நகரில் சாலை விரி வாக்கப் பணிகள் தொடங்கப்  பட்டன. இதற்காக பல கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.  இதையொட்டி சேது சாலை, பட்டுக்கோட்டை சாலை,  ஆவணம் சாலை, பெரியார் முதன்மைச் சாலை, அறந் தாங்கி சாலை உள்ளிட்ட பல்  வேறு இடங்களில், ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக நிழல்  தந்து கொண்டிருந்த மரங்  கள் வெட்டி அகற்றப்பட்டன. பின்னர் சாலை நடுவே முக்  கிய இடங்களில் சென்டர் மீடி யன் அமைக்கப்பட்டு, இரு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட் டன. மேலும் அகலமான தார்ச் சாலை அமைக்கப்பட்டது.  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட  நிலையில், இந்தப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டு களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது டைல்ஸ் ஒட்டி நடைபாதை அமைக்கும் பணிகள் தற்  போது நடைபெற்று வரு கின்றன.  இந்த பணிகளுக்கு மணல் பயன்படுத்தப்படா மல், எம்-சாண்ட் பயன் படுத்தப்படுகிறது. மேலும், கலவையில் உரிய அளவில் சிமெண்ட் சேர்க்காமல் ஏனோ தானோ என்று பணி கள் நடக்கின்றன.  இதனால் நடைபாதையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் பெயர்ந்தும், சில நாட்களிலேயே உடைந்தும் காணப்படுகிறது. பணி கள் ஒழுங்காகவும், முறை யாகவும், தரமாகவும் செய் யாமல் கடமைக்காக செய்  யப்படுகிறது. ஒப்பந்ததா ரர்கள் முறையாக பணி செய்யவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.  இதனை கண்டுகொள்ள வேண்டிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது சந்  தேகத்தை ஏற்படுத்தும் வித மாக உள்ளது. எனவே, “நடைபாதைப் பணிகளை முறையாக சிமெண்ட் கலவை சேர்த்து பணிகளை  தரமாக செய்து முடிக்க வேண்டும்” என பேராவூரணி பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் நேரடியாக கண்  காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள் ளது.

;