கும்பகோணம், மே 28 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அருண்குமார் (21) என்பவர் பதினோ ராம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்ததாக வும், இதற்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமாரின் நண்பர் பாலா (21) செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் தெரிவிக்கவே, அவர் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அருண்குமார் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்த னர்.