தஞ்சாவூர், மே 14 - கார் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சத்தை இரண்டு பேர் ஏமாற்றி விட்டனர் என்று முதியவர் ஒருவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தஞ்சை வண்டிக்காரத் தெருவை சேர்ந்தவர் விஜயக் குமார் (62). இவர் தனது மகனுக்கு வணிக நோக்கத்திற் காக ஒரு கார் வாங்க முடிவு செய்தார். இதற்காக தஞ்சை மாதாக்கோட்டை ரோடு ராஜா ளியார் நகரை சேர்ந்த ஞானசௌந்தரராஜ் (42), இக்பால் ஆகிய இருவரி டமும் கேட்டுள்ளார். இதில் இருவரும் கார் வாங்கி தருவதாக கூறியுள்ள னர். மேலும் விஜயக்குமாரிட மிருந்து இதற்காக ரூ.11 லட்சத்தை ஞானசௌந்தர ராஜ் வாங்கி உள்ளார். ஆனால் கார் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் கொடுத்த பணத்தை யும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து விஜயக் குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் ஆய்வாளர் பிராங்களின் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளார். இதில் ஏற்கனவே ஒரு வழக்கில் ஞானசௌந்தர ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.