districts

பேராவூரணி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.8-  பேராவூரணி வழியாக இயக்கப்படும் விரைவு ர‌யி‌ல்கள், பேராவூரணி ரயில் நிலையத் தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி வட்ட ரயில் பய னாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் ஏ.மெஞ்ஞானமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘ஏப்ரல் 8 ஆம்  தேதி முதல் இயக்கப்படும் தாம்பரம் -  செங்கோட்டை விரைவு ரயில், (எண்.20683), செங்கோட்டை - தாம்பரம் விரைவு ர‌யி‌ல்  (எண்.20684), செகந்திராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண்.07696), ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு ரயில் (எண்.07695) ஆகிய விரைவு ரயில்கள் பேராவூரணி வழி யாக இயக்கப்படுகிறது.  ஆனால், இந்த ரயில்கள் பட்டுக்கோட்டை,  அறந்தாங்கியில் நிறுத்தப்படுகிறது. இடையில் உள்ள முக்கிய சந்திப்பான பேரா வூரணியில் நிறுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக பேராவூரணியில் இருந்து பய ணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் முதி யவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. 30 கி.மீ  தொலைவில் உள்ள அடுத்த ரயில் நிலையங் களுக்கு சென்றே பயணிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்ட விரைவு  ர‌யி‌ல்கள் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று சென்றது.  இதனை கருத்தில் கொண்டு, இந்த விரைவு ரயில்களும் பேராவூரணி ரயில் நிலை யத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று பயணி களை ஏற்றிச் செல்ல தாங்கள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டு உள்ளது.  கோரிக்கை மனுவில் சங்கத்தின் செயலாளர் ஏ.கே.பழனிவேல், பொருளா ளர் பாரதி வை. நடராஜன், அமைப்பாளர் சிவ. பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் கையெழுத் திட்டுள்ளனர்.

;