districts

img

திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

திருவள்ளூர், மார்ச் 12- தினசரி லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கும் திருவள்ளூர் ரயில் நிலை யத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் ரயில் நிலையத்தை மையப்படுத்தி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தினமும் 150 புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்கின்றன. மற்றும் 60 விரைவு ரயில்கள் திருவள்ளூர் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.  இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தின மும் சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். மாவட்ட தலைநகரான திருவள்ளூர் மற்றும் திருபெருமந்தூர் ஆகிய இடங்க ளில் தொழிற்சாலைகளில் பணிப்புரியும் ஏராளமான தொழிலாளர்கள் திருவள்ளூர் வந்து தான் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். இங்கு விரைவு ரயில்கள்  நிற்காமல் செல்வதால்,  அரக்கோணம் சென்று தான் விரைவு ரயிலில் பயணம் செய்ய வேண்டி யுள்ளது. இதனால் கால விரையும், அலைச்சலுக்கு ஆளாகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையம் மாதத்திற்கு ரூ. 1 கோடிக்கு வருவாய் ஈட்டுகிறது . அந்தளவிற்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிக வசூலை பெற்றுத்தரும் ‘கிரேட் ஒன்’ தகுதி பெற்ற  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தற்போது  11 விரைவு ரயில்கள் மட்டும் நின்று செல்கின்றன. மேலும் கோவை, பெங்களூர், திரு வனந்தபுரம், மங்களூர், நீலகிரி உள்ளிட்ட 9 விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக  பொது மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கண்டுக் கொள்ளவில்லை.  இந்த நிலையில்தான், திருவள்ளூரில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (மார்ச் 11) திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தர ராசன் தலைமை வகித்தார்.  திருவள்ளூர் நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், வியாபாரிகள் சங்கத்தின் தலைவர்கள் திருவடி,  சுப்பிர மணி, திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பாஸ்கர், மூர்த்தி, ஜெயச்சந்திரன், குமார், ஜெயப்பால், இளங்கோவன், ரவி, சுரேஷ், ராய் உட்பட பலர் பேசினர். இந்த போராட்டத்தில் 16 அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.