districts

img

அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 28- கடலூர் திருப்பாதிப் புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அனைத்து கட்சி கள் சார்பில் ரயில் நிலை யம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் திருப்பாதிரிப்  புலியூர் ரயில் நிலையத்தில் காரைக்கால், மன்னார்குடி விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும், முதுநகர் ரயில் நிலையத்தில் உழ வன், ராமேஸ்வரம், திருப்பதி விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். விழுப்புரம்- மயிலாடு துறை அனைத்து பாசஞ்சர் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், கடலூர் முதுநகர் ரயில் நிலை யத்திலிருந்து சென்னைக்கு தினசரி காலை, மாலை நேரங்களில் ரயில்களை இயக்க வேண்டும். அரசின் பரிசீலனையில் உள்ள கடலூர் - பாண்டி - சென்னை இருப்பு பாதை திட்டத்தை விரைவில் அமைக்க வேண்டும், திருப்பாதிரிப்புலியூர், புதுநகர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தி அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநகரச் செய லாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். மாநகர துணை மேயர் பா.தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.குளோப், திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தென்.சிவக்குமார், குடி யிருப்போர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன், விடுதலை வேங்கைகளின் மாநிலச் செயலாளர் வெங்கடேசன், பாலு (மக்கள் அதிகாரம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.