பாபநாசம், ஜூன் 26 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில், பாபநாசம் ரயில் நிலையத் தின் மூலம் மாதம் ஒன்றிற்கு சராசரி ரூ.11 லட்சமும், ஆண்டிற்கு சுமார் ஒன்றரை கோடியும் டிக்கெட் வருவா யாக உள்ளது. என்எஸ்ஜி 5 என்ற அந்தஸ்துடைய முக்கியத் துவம் வாய்ந்த பாபநாசம் ரயில் நிலையத்தில், 10 வருடங்களாக நின்று சென்ற மைசூர்- மயிலாடுதுறை, திருச்செந்தூர் - சென்னை ஆகிய 2 விரைவு வண்டிகள் கொரோனா நோய்த்தொற்று காலத்திற்கு பிறகு நின்று செல்வதில்லை. இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.க்கள் சண்முகம், சிவா, வாசன், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் உள்ளிட் டோர் ரயில்வே அமைச்சரை பலமுறை சந்தித்துள்ளனர். ரயில்வே வாரிய தலை வரிடமும், அகில இந்திய ரயில்வே வாரிய பயணி கள் குறைதீர்ப்பு குழுவினரி டமும் கோரிக்கை வைக்கப் பட்டது. தொடர் முயற்சிக்குப் பின்னரும் ரயில்வே நிர்வா கம் இதுவரை ஒப்புதல் வழங்காதது கண்டனத்திற் குரியது. பாபநாசத்தைவிட மிக குறைந்த வருவாய் கொண்ட ரயில் நிலையங் களில்கூட இந்த வண்டிகள் நின்று செல்கின்றன. இதன் காரணமாக, பாப நாசத்தைச் சேர்ந்த பயணிகள் 30 கி.மீ பயணித்து தஞ்சா வூர் சென்றுதான் ரயிலில் பய ணிக்க வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற கால விரயம், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் விரைந்து மேற்படி இரண்டு வண்டிகளும் பாபநாசத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.