districts

ஒக்கநாடு கீழையூரில் ஆக்கிரமிப்பை அகற்றி வனவிருட்சம் அமைத்து தர வேண்டும் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை

தஞ்சாவூர், செப்.30 - தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவருமான என்.சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  வனவிருட்சம் ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் முதன்மை மற்றும் கூடுதல் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. முதன்மை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ஏற்கனவே தைலமரம், குப்பைமேடு, முட்புதர்களாக இருந்த  இடத்தை சுயமுயற்சியின் கீழ் சீரமைத்து, சமப்படுத்தி உழவு செய்து, நிலத்தை விவசாயம்  அல்லது பலவற்றுக்கு பயன்படும் வகையில் சிர மப்பட்டு மிகச் சிறப்பாக தயார் செய்து வைத்துள் ளோம்.  அந்த இடத்தில் விலை உயர்ந்த மரங்களை நட்டு வளர்த்து, வனவிருட்சம் அமைத்திட வேண்டும். அத்துடன் அதனையொட்டிய பகுதி யில் குளமும் உள்ளது. அதையும் சுய முயற்சி யில் தூர்வாரி ஓரளவிற்கு சீர் செய்துள்ளோம். அந்தப் பகுதி, அருகில் உள்ள விவசாயிகள் ஒரு  சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதையும் அளவீடு செய்து தரக் கோரி, நில அள வைக்கு பணம் கட்டி இரண்டு ஆண்டுகள் கடந்தும்  நிர்வாகம் அளவீடு செய்யவில்லை.  எனவே மேற்கூறிய பகுதியை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஆழ்துளைக் கிணறும், நான்கு புறமும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தாங்கள் செய்து உதவிட வேண்டும். அத்துடன் இந்த கோரிக்கை மனு மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் 
ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூர் மற்றும் குலமங்கலம் பகுதியை ஒட்டிய பகுதியில்  விவசாய நிலங்கள் தொடர்ந்து நீரில் மூழ்கி பாதிக் கக் கூடிய சூழல் ஏற்படுகிறது. சமயன்குடிக் காடு, கண்ணனாற்றில் கடந்த இரண்டு நாட்கள்  பெய்த மழையால் வெள்ளைக்காடாக காட்சியளித் ததுடன் ஆற்றங்கரையிலும் உடைப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுக்குள்ளாக மூன்றா வது முறையாக தூர்வாரும் பணி அந்த பகுதி யில் நடைபெற்றுள்ளது. ஆற்றின் கரையை பலப்படுத்தி, கான்கிரீட் வடிகால் வசதி ஏற்படுத்தி னால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் தீரும்.  மேலும், இந்த பணிகளை கவனித்து வந்த  அக்னி ஆறு கோட்டம், ஒரத்தநாடு பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனமற்ற, அலட்சி யப் போக்கும் இதற்கு ஒரு காரணமாகும். இது தொ டர்பாக, மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வேலை  செய்கிற காரணத்தினால் சம்பந்தப்பட்ட பொறி யாளர் புனிதாவின் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் விரோதப் போக்காக உள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.