districts

img

ரேசன் கடைகள், குடோன்களில் உள்ள கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை பாயும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தஞ்சாவூர், செப்.21 -  ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக  பெரும் புள்ளிகளையும், ரேசன் கடை கள், குடோன்களில் உள்ள கருப்பு ஆடு களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சாவூரில், புதன்கிழமை ரேசன் கடைகள், நெல் சேமிப்பு குடோன் களை ஆய்வு செய்த பிறகு செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது:   “75 ஆண்டுகள் கடந்தாலும் தரை யில் மூங்கில் குச்சி போட்டு, தார்ப்பாய் கொண்டு நெல் மூட்டைகளை மூடி வைக்கும் நிலைமை இன்னும் உள்ளது.  இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகை யில், டெல்டா மாவட்டங்களில் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் செமி குடோன் கள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் இறுதிக்குள்ளாக இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளன.   மத்திய அரசின் சேமிப்பு குடோன் களில் வைப்பதற்கும் அனுமதி கேட்டுள் ளோம். அதன்படி திருச்சியில் 35 ஆயிரம்  மெட்ரிக் டன் அளவிற்கு நெல் வைப்பதற் கான காலியிடம் உள்ளது. அதை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை தொ டர்ந்து கண்காணித்து ரேசன் அரிசி கடத் தலைப் பிடித்து வருகிறோம்.

கடந்த 10  நாட்களில், 99 மெட்ரிக் டன் ரேசன் அரிசி, 3.5 மெட்ரி டன் கோதுமையைத் தனியார் மில்லில் விற்பதற்காக வைக் கப்பட்டிருந்ததைப் பிடித்தோம். ஓட்டு நர், பணியாளர்கள் இல்லாமல், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள் ளோம். மேலும், இரண்டு தனியார் மில்லில் ஆய்வு செய்து மொத்தமாக 120 மெட்ரிக் டன் ரேசன் அரிசி பறி முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனி நபர்கள், இறந்த வர்கள் என சுமார் 2.45 லட்சம் பேரை யும், கூட்டுக் குடும்ப அட்டையில் இறந்த  நபர்கள் என 14.26 லட்சம் பேரையும் ரேசன் கார்டுகளில் இருந்து நீக்கும் பணி கள் நடந்து வருகிறது. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க 4 எஸ்.பி., 12 டி.எஸ். பி.,க்கள் 24 இன்ஸ்பெக்டர்கள், 87 சப்–  இன்ஸ்பெக்டர்கள் என பணியில் உள்ள னர். அதே சமயம் ரேசன் கடைகளில்  அரிசியை வாங்கி தனியார் வியாபாரி யிடம் விற்பனை செய்யாமல் பொது மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரேசன் அரிசி கடத்தலை கடந்த  இரண்டு மாதங்களாக தீவிரமாக கண்கா ணித்து தடுத்து வருகிறோம். இது தொடர்பாக பெரும் புள்ளிகளையும், ரேசன் கடைகள், குடோன்களில் உள்ள  கருப்பு ஆடுகளையும் பிடிக்க நடவ டிக்கை எடுக்கப்படும். நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களில் வியாபாரி கள் வருவதைத் தடுக்க, ஒன்றிய அள வில் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப் பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.  

திருச்சிராப்பள்ளி
திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள திருச்சி மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி கிளையினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அரசு முதன்மை செயலா ளர் ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.  பின்னர் மாற்றுத்திறனாளிகள், விவ சாயிகள், மகளிர் சுயஉதவிக் குழு வினர், கைம்பெண்கள் மற்றும் கணவ னால் கைவிடப்பட்டோர், டிராக்டர் வாக னம் வாங்குதல் என 15 பயனாளி களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கடனு தவிகளை வழங்கினார். மேலும் வாக னத்தின் மூலம் நடமாடும் கூட்டுறவு வங்கி சேவை செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பாண்டியன், கூட்டுறவு சங்கங் களின் இணைப் பதிவாளர் ஜெயராமன்  மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர் கள் உடனிருந்தனர்.

;