districts

பட்டுக்கோட்டை கரிக்காடு அண்ணாநகரில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களை அப்புறப்படுத்த நோட்டீஸ்: குடியிருப்போர் அதிர்ச்சி

தஞ்சாவூர், அக்.12 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, அண்ணாநகர் பகுதியில் குடியிருந்து வருபவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டும் என நகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளதால், 50 ஆண்டு களுக்கும் மேலாக குடி யிருப்போர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பட்டுக்கோட்டை நக ராட்சி, 33 ஆவது வார்டு, கரிக் காடு அண்ணா நகர் குடி யிருப்பு பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட குடும்பங் களைச் சேர்ந்த, 1500-க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் நக ராட்சிக்கு சொத்து வரி, வீட்டு  வரி, ஸ்தல வரி கட்டி வரு கின்றனர். மேலும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்று பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.  இந்நிலையில், “இவர் கள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வரு வதாகவும், உடனடியாக குடி யிருப்போர் இடத்தை காலி செய்ய வேண்டும்” எனக் கூறி நகராட்சி சார்பில் அங்கு குடியிருந்து வரும் அனைத்து குடும்பங்க ளுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. இதனால் இப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்நிலையில் அண்ணா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி, ரெ.ஞானசூரியன், பாலகிருஷ்ணன் மற்றும்  நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டுக் கோட்டை நகராட்சி ஆணை யர் சௌந்தரராஜனை நேரில் சந்தித்தனர்.  அப்போது, “தாங்கள் பல  ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்திலேயே குடி யிருக்க அனுமதிக்க வேண்டும். குடியிருப்பை காலி செய்யக்கூடாது” என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தான் முடிவெடுக்க முடியும்  என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.  இந்நிலையில், குடியிருப்போர் நலச்சங்கத் தினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட தீர்மா னித்துள்ளனர்.

;