தஞ்சாவூர், நவ.17 -
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தகை சால் தமிழர் தோழர் என். சங்க ரய்யா நவம்பர் 15 புதனன்று மறைந் தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் மௌன ஊர்வலம் மற்றும் அஞ்சலிக்கூட்டங்கள் நடை பெற்றன. இதில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சாவூர் மாவட்டக்குழு அலுவ லகத்தில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில் தஞ்சை ரயில் நிலை யத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன், தஞ்சை மாநகர மேயர் சண். ராமநாதன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்தி ரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, தமிழ் தேசிய பேரியக்கம் பெ. மணியரசன், உலகத் தமிழர் பேரமைப்பு அய்யனாபுரம் முரு கேசன், மதிமுக மாவட்டச் செய லாளர் தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநகரத் தலைவர் நரேந்திரன், மக்கள் கலை இலக்கிய கழகம் இராவணன், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பழனி ராசன் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை யாற்றினர்.
பட்டுக்கோட்டை மணிக்கூண்டி லிருந்து தபால் நிலையம் வரை சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ். கந்தசாமி தலைமையில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டுக் கோட்டை எம்எல்ஏ கா.அண்ணா துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பக்கிரி சாமி, காங்கிரஸ் கட்சி வழக்குரைஞர் ராமசாமி, மதிமுக நகர செயலாளர் செந்தில், திராவிடர் கழகம் நகரச்செயலாளர் சிற்பி சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். ஒரத்தநாட்டில், ஒன்றிய செயலா ளர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை யில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திருவையாறு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். அதிமுக மத்திய மாவட்டச் செயலா ளர் ரெத்தினசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி, திருவையாறு பேரூராட்சி தலை வர் சி.நாகராஜன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் கௌத மன், அதிமுக வடக்கு ஒன்றிய செய லாளர் இளங்கோவன், தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜா, காங்கி ரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கேசன், சக்கரவர்த்தி மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.
பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து, அமைதி ஊர்வலம் புறப் பட்டு, சானூரப்பட்டி கடைவீதியில் இரங்கல் கூட்டமும், பூதலூர் 4 ரோட்டில், வியாழக்கிழமை காலை இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
பூதலூரில் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், திமுக நிர்வாகி சுபா கலியமூர்த்தி, அதிமுக முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் காம ராஜ், வி.சி.க இளங்கோ, காங்கிரஸ் அன்பழகன், தர்மசீலன், விவசாயி கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்
செங்கிப்பட்டியில், ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், திமுக பொன். க.லெனின், மாசி, மதிமுக நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைதி ஊர்வலம், இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியச் செயலாளர் முரளிதரன், ஏ.ஐ.டி.யூ.சி மாநில நிர்வாகி தில்லை வனம், சிபிஐ ஒன்றியச் செயலர் சேகர், தி.மு.க பேரூர் செயலர் கபிலன், அ.ம.மு.க பேரூர் செயலர் பிரேம் நாத் பைரன், தி.க நகரத் தலைவர் இளங்கோவன், செயலர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
திருச்சி
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வையம்பட்டி ஒன்றியத்தில் சிபிஎம் ஒன்றியசெயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
லால்குடி அருகே புள்ளம்பாடியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் அஞ்சலி உரையாற்றினார். திமுக எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் மற்றும் திமுக, பல்வேறு கட்சி பிரமுகவர்கள் கலந்து கொண்டனர்.
புலிவலம் கடைவீதியில் விவசாய தொழிலாளர் சங்க அனைத்து அரசி யல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறையில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், தி.மு.க மாநிலப் பேச்சாளர் இலி யாஸ், ம.தி.மு.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம், வி.சி. க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆற்றல் அரசு, மணப்பாறை காங்கிரஸ் கட்சிச் செய லாளர் சிவா மற்றும் சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளர் இந்திரஜித் ஆகி யோர் புகழஞ்சலி உரையாற்றினர்.
முன்னதாக இரங்கல் ஊர்வலம் மணப்பாறை காமராஜர் சிலையிலி ருந்து புறப்பட்டு மணப்பாறை பெரியார் சிலை வரை நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் புகழஞ்சலி நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் பி சீனி வாசன் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், சிபிஐ மாவட்ட செய லாளர் அ.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா ளர். சிவ.மோகன்குமார், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலா ளர் ஓ.எஸ்.ஷேக்கலாவுதீன், மதிமுக நகரச் செயலாளர் ஜி. கோவிந்த ராஜன், அதிமுக நகர செயலாளர் செந்தமிழன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் இரெ. இடும்பையன் மற்றும் அனைத்து கட்சி தலை வர்களும், தோழர்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். முன்னதாக டி.இ.எல்.சி பள்ளியிலிருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் துவங்கி கிட்டப்பா அங்காடி வந்தடைந்தது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடை தெரு, வேதாரண்யத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் நகரக்குழு சார்பில் அவுரிதிடலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு நகரச்செயலாளர் க. வெங்கடேசன் தலைமை வகித்தார்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் அமைதிப் பேரணி யும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
கும்பகோணம் ஒன்றியம் தேவனஞ்சேரி கடை வீதியில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோவில் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையிலும் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் திருபுவனம் கடைவீதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்துக்கட்சியினர் கலந்து கொண்டனர்
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு சிபிஎம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கும்ப கோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், விசிக மண்டல செயலாளர் விவேகானந்தன் சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் சிபிஎம் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ரு தீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எல்.ராசு,மதிமுக ஒன்றிய செயலா ளர் பந்தல் முத்து, நகர செயலாளர் செந்தில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலா ளர் சேதுராமன்,நகரச் செயலாளர் தேவேந்திரன், திராவிடர் கழக நிர்வாகி ஆசைத்தம்பி, மனிதநேய மக்கள் கட்சி யின் நிர்வாகி அப்துல் ரஜாக் உட்பட பலர் பங்கேற்றனர். காந்தி சிலையில் இருந்து துவங்கிய அமைதி ஊர்வலம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் முடிவடைந்தது. a
கரூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் மௌன அஞ்சலி பேரணி கரூர் 80 அடி சாலை யில் துவங்கி, பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு நிறைவடைந் தது. அங்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாவட்ட செயலா ளர் மா. ஜோதிபாசு தலைமை வகித் தார். கரூர் நாடளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திமுக மாமன்ற உறுப்பி னர் ராஜா, சிபிஐ மாவட்ட செயலா ளர் நாட்ராயன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை ஒன்றியக்குழு சார்பில் குளித்தலை சுங்ககேட்டில் இருந்து மௌன ஊர்வலம் புறப்பட்டு பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நிறை வடைந்தது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தோகைமலை ஒன்றியக் குழு சார்பில் காவல்நிலையம் அருகிலி ருந்து மௌன ஊர்வலம் புறப்பட்ட, தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்து, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கடவூர் வட்ட குழு சார்பில் தரகம் பட்டி பேருந்து நிலையம் முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பி.பழனிவேல் தலைமை வகித்தார். பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவி வர்மன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வ லம் அறந்தாங்கி வ.உ.சி திடலில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. நகர் மன்ற தலைவர் இரா. ஆனந்த், திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் தலைவர் வீராசாமி, மதிமுக நகர செயலாளர் மோகன், சிபிஐ நகர செய லாளர் அஜாய், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கிரின் முகமது, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முபாரக் அலி, சமாஜ்வாதி கட்சி மாவட்ட தலைவர் சரவண முத்து, கீரமங்கலம் பேருராட்சி துணைத் தலைவர் தமிழ்மாறன், விடு தலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் நாகமுத்து, திசைகள் முபாரக், அதிமுக முருகேசன் ,தரைக் கடை வியாபாரிகள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், மாதர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.