districts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூர் - மயிலாடுதுறை இடையே அக்.21-ல் சிறப்பு ரயில் இயக்கம்

கும்பகோணம்,  அக்.10 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21  அன்று மைசூர் - மயிலாடு துறை சிறப்பு ரயில் இயக் கப்படுகிறது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன் னிட்டு தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் அக்.24 ஆம் தேதிக்கு முன்பே சிறப்பு  ரயிலை இயக்க உள்ளது. அதன்படி, அக்.21 அன்று  (வெள்ளிக்கிழமை) இரவு  11.45 மணிக்கு 16 பெட்டி களை கொண்ட சிறப்பு ரயில்  வண்டி எண்.06252 மைசூ ரில் இருந்து புறப்பட்டு பெங்களூர், ஓசூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்ப கோணம் வழியாக, மறுநாள்  அக்.22 அன்று (சனிக் கிழமை) மாலை 3.30 மணிக்கு  மயிலாடுதுறை வந்து சேரும். அதுபோன்று, மறு மார்க்கத்தில் மயிலாடு துறையில் இருந்து அக்.22 அன்று (சனிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு கும்ப கோணம், பாபநாசம், தஞ்சா வூர், திருச்சி, கரூர், சேலம், பெங்களூர் வழியாக மைசூ ருக்கு அக்.23 அன்று (ஞாயிறு) மதியம் 12 மணிக்கு  சென்றடையும். தற்சமயம், தினசரி மைசூர் செல்லும் விரைவு ரயில் வண்டி, பாபநாசத்தில் முன்பு இருந்தது போன்றே நிரந்தரமாக நின்று  செல்வதற்கு துரிதமான  முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஆனால் இந்த சிறப்பு ரயில், அன்று  ஒருநாள் மட்டும் இரு மார்க்கங்களிலும் பாப நாசத்தில் நின்று செல்லும் என்பதால், பயணிகள் இதனை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டு மென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;