districts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத் - தஞ்சாவூர் சிறப்பு ரயில் இயக்கம்

பாபநாசம், அக்.18 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி செகந்தி ராபாத் - தஞ்சாவூர் இடையே சென்னை எழும்பூர், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண்.07685 செகந்திராபாத் -  தஞ்சாவூர் சிறப்பு ரயில் அக்டோபர் 22 மற்றும்  29 ஆம் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு  8.25 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு  நால்கொண்டா, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர் (ஞாயிறு காலை 10.15),   திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடு துறை வழியாக, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணிக்கு கும்பகோணம், 5.24 மணிக்கு பாபநாசம் வந்து தஞ்சாவூருக்கு இரவு 7 மணிக்கு சென்றடையும்.  மறு மார்க்கத்தில் வண்டி எண்.07686 தஞ்சாவூரிலிருந்து அக்டோபர் 24 மற்றும் 31 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் (காலை 7.19),  கும்பகோணம் (காலை 7.48), சென்னை எழும்பூர் (பகல் 2 மணி) வந்து செவ்வாய்க் கிழமை காலை 6.30 மணிக்கு செகந்திரா பாத் சென்றடையும். கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பண்டிகைக் கால சிறப்பு ரயில் இவ்வழியே அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற் கத்தக்கது. இந்த சிறப்பு ரயில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பகுதிகள் மற்றும் சென்னையில் இருந்து மெயின் லயன் பகுதிக்கு, தீபாவளியை பண்டிகைக்காக வரும் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;