districts

img

சத்துணவு ஊழியர்கள் பாத யாத்திரை: குடவாசலில் கோரிக்கை விளக்கப் பிரச்சாரம்

குடவாசல், ஜூன் 6 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கடந்த ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை இராமேஸ்வரம், மயிலாடுதுறை, கும்மிடிப் பூண்டி, கோவை, திருப்பத் தூர், கன்னியாகுமரி, ஓசூர் ஆகிய ஏழு முனைகளில் இருந்து 2100 கிலோ மீட்டர் தூரம் தமிழக அரசிடம் நீதி கேட்டு பாதயாத்திரை நடை பயண பிரச்சாரம் நடை பெற்று வருகிறது.   இதனையொட்டி தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.மலர்விழி தலைமையில் வந்த பிரச் சார பயணக் குழுவினர், திங்கள்கிழமை குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலை யம் அருகே கோரிக்கை களை விளக்கி பிரச்சாரம் செய்தனர். சங்கத்தின் குடவாசல் வட்டக் கிளை தலைவர் எஸ். பாலசுப்பரமணியன், செய லாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்டச் செயலாளர் வி.சி.குமார், மாவட்ட தலை வர் எஸ்.கரிகாலன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. வெற்றிசெல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கோதையம்மாள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.ராஜமாணிக்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் துறைவாரி யாக நிர்வாகிகள், அரசு  ஊழியர் சங்க பொறுப்பா ளர்கள் மற்றும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

;