districts

கொசுத் தொல்லையை  ஒழிக்க புதிய திட்டம்  

கும்பகோணம், மே 6 -  கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் பழைய நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மாநகராட்சி நிர்வா கத்தின் வருவாயை பெருக்குவதற்கு தேவையான வழிமுறை கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் இதில் மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும்  கொசு தொல்லையை கட்டுப்படுத்தவும் கொசு உற்பத்தியை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் ரூ.23 லட்சம் செலவில் புதிய  திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

;